2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

முதலீட்டாளர்கள் தினம் 2013 யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக நிறைவு

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 02 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலீட்டாளர்கள் தினம் 2013 நிகழ்வு சுமார் 150இற்கும் அதிகமான பங்குபற்றுநர்களுடன் வெற்றிகரமாக பூர்த்தியடைந்திருந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.

கொழும்பு பங்குசந்தையின் யாழ்ப்பாணக் கிளை மற்றும் இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் மூலம் இந்த முதலீட்டாளர்கள் தினம் 2013 நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மூலதனச் சந்தையில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக வடக்கு பிராந்தியத்தை சேர்ந்த மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து, எதிர்வரும் காலங்களில் மேலும் பல விழிப்புணர்வு திட்டங்களை முன்னெடுக்க தாம் தீர்மானித்துள்ளதாக இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவித்துள்ளது.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .