2026 மே 07, வியாழக்கிழமை

dd

இலங்கையிலிருந்து வெளியேறுவதாக AIG அறிவிப்பு

Menaka Mookandi   / 2014 ஜூன் 13 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச ரீதியில் காப்புறுதி சேவைகளை வழங்குவதில் புகழ்பெற்ற நிறுவனமான AIG இலங்கையிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

இலங்கையின் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தமது காப்புறுதி தீர்வுகள் அமைந்திராமையின் காரணமாகவும், சர்வதேச ரீதியில் தமது வர்த்தக செயற்பாடுகளை மீளாய்வு செய்கின்றமையினாலும் இந்த தீர்மானத்தை தாம் மேற்கொள்ள நேரிட்டதாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கொழும்பில் BOC மேர்ச்சன்ட் டவரில் கொண்டிருந்த தனது அலுவலகத்தையும் மூட தீர்மானித்துள்ளதுடன், அதில் பணியாற்றிய ஊழியர்களுக்கு நட்ட ஈட்டுடன் கூடிய கொடுப்பனவை வழங்க தாம் முன்வந்துள்ளதாக காப்புறுதி சபையின் தலைவர் இந்திராணி சுகததாசவுடன் முன்னெடுத்திருந்த சந்திப்பில் நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

130க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது செயற்பாடுகளை கொண்டுள்ள AIG, 2000ஆம் ஆண்டு இலங்கையில் தனது செயற்பாடுகளை ஹேலீஸ் லிமிடெட் உடன் பங்காண்மை அடிப்படையில் தனது வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தது. 2005 ஆம் ஆண்டில் ஹேலீஸ் AIG  தனது ஆயுள் காப்புறுதி மற்றும் நீண்ட கால காப்புறுதி திட்டங்களை வழங்குவதை இடைநிறுத்தியிருந்தது.

நிறுவனத்தின் இந்த தீர்மானம் குறித்த வாய்மூல அறிவித்தல் புதன்கிழமை வெளியாகியிருந்த போதிலும், எழுத்து மூலமான அறிவித்தல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .