2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஜனசக்தி அனுசரணையுடன் 'Future Minds Higher Education and Career Exhibition'

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 07 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முன்னணி காப்புறுதி வழங்குனராகிய ஜனசக்தி, இலங்கையின் எதிர்கால சந்ததியினர் வளமான கல்விப் பாதையை தெரிவு செய்வதற்கான ஊக்குவிப்பை வழங்கும் நோக்கில் 8ஆவது தேசிய கல்வி மற்றும் தொழில் வழிகாட்டி கண்காட்சிக்கு (Future Minds Higher Education and Career Exhibition) அனுசரணை வழங்கியுள்ளது. இக் கண்காட்சியானது பாடசாலையை பூர்த்தி செய்த மாணவர்கள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்களிற்கு பொருத்தமான உயர்கல்வி வாய்ப்பை தேர்ந்தெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகிறது. இவ்வாண்டு கண்காட்சி கடற்றொழில் மற்றும் கடல்வள அமைச்சு அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. 2013 தேசிய கல்வி மற்றும் தொழில் வழிகாட்டி கண்காட்சியானது இம்முறை கொழும்பு, கண்டி மற்றும் காலி ஆகிய பிரதேசங்களில் நடைபெறவுள்ளது.
 
ஜனசக்தி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரகாஷ் ஷாஃப்ட்டர் கருத்து தெரிவிக்கையில், 'கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒரே தளத்தை வழங்குகின்ற இலங்கையின் மிக முக்கிய கல்விக் கண்காட்சியாக இது அமைந்துள்ளது. போட்டிமிக்க சந்தையின் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் எனும் ரீதியில், மனித நிர்வாகத் திறமை மற்றும் மனிதனின் திறனுக்கு இணையான நவீன உற்பத்திகள் மற்றும் அபிவிருத்திகளை மேம்படுத்துவது தொடர்பில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். எனவே, வலுவான மற்றும் தகுதியான நாளைய தலைவர்களை உருவாக்கும் இத்தகைய முயற்சிகளுக்கு நாம் ஆதரவு வழங்குகின்றோம்' என தெரிவித்தார்.
 
இக் கண்காட்சியானது மாணவர்களிற்கு தொழில் வாய்ப்பை தெரிவு செய்வதற்கான வழிகாட்டியாக அமைவதுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உயர் கல்வி வாய்ப்புகள் தொடர்பான தகவல்களை ஒரே கூரையின் கீழ் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பினையும் வழங்குகின்றது. இக் கண்காட்சியில் அடுத்த தலைமுறையினரின் ஆக்கத்திறனை கண்டறியும் நோக்கில் பாடசாலை மாணவர்களுக்கான ''Future Minds Talent Tank' போட்டியும் நடைபெற்றது.
 
ஜனசக்தி நிறுவனம் மனித வள அபிவிருத்திகளுக்கென அதிக முதலீடுகளை செய்துள்ளது. புதிய ஆட்சேர்ப்பின் போது பயிற்சி மற்றும் அபிவிருத்தி ஆகியன விரிவான பயிற்சி நடைமுறையாக அமையும். 'மனித வலு மற்றும் பயிற்சி அபிவிருத்திகள் குறித்து நாம் அதிக அக்கறை செலுத்தி வருகின்றோம். வருடாந்தம் நாம் 60 மில்லியன் ரூபாய்களை பயிற்சிகளுக்காக செலவிடுகிறோம். மக்கள் தங்கள் தொழில்முறை திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கு அமெரிக்கா, ஜப்பான், ஐக்கிய இராச்சியம், டுபாய், வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர். இதற்கு மேலதிகமாக, நாம் முழுநேர பயிற்றுவிப்பாளர் குழுவினர் மூலம் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் பயிற்சிகளை வழங்குகின்றோம். பொறுப்புமிக்க நிறுவனம் எனும் ரீதியில், எமது நிறுவனத்தின் பணியாளர்களுக்கு வழங்கிய அதே ஆதரவினை நம் நாட்டின் அடுத்த தலைமுறையினருக்கும் வழங்க விரும்புகின்றோம். எமது ஆதரவினை செயற்திறன் மிக்க வகையில் விரிவுபடுத்துவதற்கான சிறந்த தளமாக இக் கண்காட்சி விளங்குகிறது' என ஜனசக்தி காப்புறுதியின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் செஹாரா டி சில்வா தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .