2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

செப்டெம்பர் மாதத்தில் Jaffna Speed Festival 2013 இடம்பெற ஏற்பாடு

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 09 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். நகரத்தில் முதன்முதலாக இடம்பெறவுள்ள மோட்டார் பந்தய நிகழ்வான Jaffna Speed Festival 2013 எதிர்வரும் செப்டெம்பர் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இலங்கை மோட்டார் வாகன விளையாட்டு சங்கம் மற்றும் இலங்கை மோட்டார் சைக்கிள் விளையாட்டு சம்மேளனம் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்ட நிகழ்வு ஏற்பாட்டு அனுமதிப்பத்திரத்தின் கீழ் மோட்டார் பந்தய அமைப்பு மற்றும் ஆசிய மோட்டார் பந்தயக் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து கார்ல்டன் மோட்டார் விளையாட்டு கழகம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. 
 
இலங்கைப் பிரஜைகள் மற்றும் இலங்கையில் வசிக்கும் உரிமையைக் கொண்டுள்ள எவரும் இந்த மோட்டார்ப் பந்தய நிகழ்வில் கலந்துகொள்ளும் தகைமையைக் கொண்டுள்ளதுடன், இது இலங்கை மோட்டார் வாகன விளையாட்டு சங்கத்தின் வருடாந்த நிகழ்வுகளில் ஒன்றாகவும் இடம்பெற்றுள்ளது. 
 
யாழ். நகரிலிருந்து ஆரம்பிக்கும் இந்த மோட்டார் பந்தய ஓடுபாதையானது 200 கிமீ வரையான மொத்த தூரத்துடன் அமைந்துள்ளதுடன், பல்வேறு கட்டங்களாக போட்டிகள் இடம்பெறவுள்ளன. இது விசேட கட்டங்களையும், போக்குவரத்துக் கட்டங்களையும் உள்ளடக்கியிருக்கும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .