2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தாய்லாந்து இளவரசியின் 'Laksala Museum Gallery Cafe' விஜயம்

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 01 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


தாய்லாந்து இளவரசி மஹா சக்ரி சிரிந்தோரன் தனது இலங்கை விஜயத்தின் போது புதிதாக திறக்கப்பட்ட தாய்லாந்து இளவரசியின் 'Laksala Museum Gallery Cafe' விஜயம் காட்சியறையை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

கொழும்பு அருங்காட்சிய வளாகத்தில் அமைந்துள்ள இக் காட்சியறைக்கு வருகை தந்த இளவரசியை லக்சலவின் தலைவரும், பிரதான நிறைவேற்று அதிகாரியுமான அனில் கொஸ்வத்த மற்றும் அவரின் குழுவினர் வரவேற்றனர்.

ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இப்புதிய காட்சியறை மூலம் உலகம் பூராகவும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக சேவைகள் வழங்கப்படுகின்றன.

இப்புதிய காட்சியறை 30,000க்கும் அதிக கையிருப்பு அலகுகளை (SKU) தன்னகத்தே கொண்டுள்ளதுடன், நாடுபூராகவும் விநியோக வலையமைப்பினையும் விஸ்தரிக்க தீர்மானித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .