2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சிங்கர் மற்றும் SONY இணைந்து அறிமுகம் செய்துள்ள புதிய தெரிவுகள்

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 13 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


நுகர்வோர் பாவனைப் பொருட்களை வழங்கும் நாட்டின் முன்னணி வர்த்தகநாமமான சிங்கர் (ஸ்ரீலங்கா) பிஎல்சி நிறுவனமானது, இலங்கையில் முதற்தடவையாக ஜப்பானின் மின்னணு ஜாம்பவானான SONY இன் வாடிக்கையாளர் மற்றும் இலத்திரனியல் உற்பத்தி தெரிவுகளை அறிமுகம் செய்துள்ளது.
 
இந்த பங்காண்மையின் ஊடாக, சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனமானது SONY இன் வாடிக்கையாளர் மற்றும் இலத்திரனியல் உற்பத்தி வரிசைகளில் உள்ள Bravia தொலைக்காட்சிகள், Cyber-shot மற்றும் டிஜிட்டல் கமராக்கள், Walkman ஓடியோ உற்பத்திகள், Xperia கைபேசி தெரிவுகள் மற்றும் டெப்லட் சாதனங்கள் போன்ற உற்பத்திகளுக்கான அதன் சில்லறை வலையமைப்பு, உற்பத்தி விநியோகம், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது. 
 
படத்தின் தரம் மற்றும் வீட்டு பொழுதுபோக்கு பார்க்கும் அனுபவத்தின் தரத்தினை மீள வரையறுக்கும் வகையில், இந் நிகழ்வில் Bravia தெரிவுகளில் 4K டிவி, LED மற்றும HD தொலைக்காட்சிகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. அற்புதமான செயல்பாடு மற்றும் புதுமையான வடிவமைப்பு ஆகியன வாடிக்கையாளர்களிற்கு தெட்டத் தெளிவான படத்தின் தரத்தை அனுபவிக்கச் செய்கிறது. இந்த புதிய டிவி ரகங்கள், வாடிக்கையாளருக்கு தங்களது பொழுதுபோக்கு தேவைகளுக்கு பொருத்தமான வலுவான அம்சங்கள் மற்றும் புத்திசாலித்தனமான தீர்வுகளை வழங்குவதாக அமைந்துள்ளது.
 
400 சில்லறை காட்சியறைகள், 8 பிராந்திய சேவை நிலையங்கள் மற்றும் 150க்கும் சேவை காட்சியறைகளில் சிங்கரின் விற்பனைக்கு பின்னரான சேவையை நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
 
'Sony நிறுவனத்தின் நவீன உயர்தரம் வாய்ந்த உற்பத்திகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் எமது முயற்சிகளை பிரதிபலிக்கும் இந்த கைகோர்ப்பானது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது' என சிங்கர்(ஸ்ரீலங்கா) பிஎல்சி இன் சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக பணிப்பாளர் மஹேஷ் விஜயவர்தன தெரிவித்தார். 'வெளிப்புற பாதுகாப்பு மற்றும் தொழில்சார் சிறப்பம்சங்களுடன் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த தொலைக்காட்சிகள் தொழில்நுட்பத்தின் மீது ஆர்வமுள்ள எமது வாடிக்கையாளருக்கு பொருத்தமானதாக அமைந்துள்ளதுடன், புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் தெரிவுகள் நோக்கி தொழிற்துறையை வழிநடத்திச் செல்லும் Sony போன்ற வர்த்தகநாமத்துடன் இணைந்துள்ளமை குறித்து நாம் மிகவும் பெருமையடைகிறோம்' என மேலும் அவர் தெரிவித்தார்.
 
'Sony உடனான எமது வலுவான இணைப்பானது எமது சேவை விரிவாக்கத்திற்கான தீர்க்கமான படிமுறையாக இருப்பதாக நாம் நம்புகிறோம். புதிய உற்பத்திகள் மற்றும் தொழில்நுட்பத்தில் நிலையான புதுமைகளை மேற்கொள்வதில் புகழ்பெற்ற வர்த்தகநாமமான சிங்கரானது தொடர்ந்து எமது வாடிக்கையாளர்களின் வாழ்வை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது' என விஜேவர்தன தெரிவித்தார். 
 
இந் நிகழ்வில் திடமான நீடிப்பு மற்றும் மேம்படுத்த சிறப்பம்சங்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட Sony இன் புதிய BRAVIA R350B மற்றும் R306B டிவி-க்கள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. இதன் காற்றோட்ட துளைகள் இல்லாத வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட வர்ணப்பூச்சு தீர்வு ஆகியன ஈரப்பதன், surge, மின்னல் மற்றும் தூசு போன்ற வெளிப்புற ஆபத்துக்களிலிருந்து டிவி-ஐ பாதுகாப்பதாக அமைந்துள்ளது. மேலும் ஒருவரது தொலைக்காட்சியை மோசமாக சேதமாக்கக்கூடிய பூச்சிகள் போன்றவை டிவி-யினுள் உட்செல்வதை தடுப்பதாக அமைந்துள்ளது.
 
சிங்கரின் நியமனம் குறித்து SONY தென்கிழக்கு ஆசியா இன் இலங்கை பிரதிநிதி அலுவலகத்தின் தலைமை பிரதிநிதி அலெக்ஸ் யீ கருத்து தெவிக்கையில் 'இன்றைய கைகோர்ப்பின் மூலம் SONY இனால் அதன் நவீன உற்பத்திகளை இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்த முடிந்துள்ளது. இந்த அளப்பரிய இணைப்பு ஊடாக உள்நாட்டு சந்தையில் விரிவான முறையில் சேவைகளை வழங்க இரு நிறுவனங்களும் எதிர்பார்த்துள்ளோம். மிகச்சிறந்த கண்டுபிடிப்பு மற்றும் விற்பனை வலுவை கொண்ட சந்தை முன்னோடியாக திகழும் சிங்கர் உடன் கைகோர்த்துள்ளமை குறித்து நாம் மிகவும் பெருமையடைகிறோம்' என தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X