2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

அமானா வங்கியிடமிருந்து TATA வாகனங்களுக்கான நிதிக்குத்தகை

A.P.Mathan   / 2013 மார்ச் 24 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


அமானா வங்கி அண்மையில் இலங்கையின் மோட்டார் வாகனத் தொழிற்துறையின் முன்னோடி நிறுவனமான டீசல் & மோட்டார் என்ஜினியரிங் (DIMO) கம்பனியுடன் DIMO Batta மற்றும் Batti வாகனங்கள் உள்ளிட்ட TATA ரக வர்த்தக வாகனங்களுக்கு விசேட நிதிக்குத்தகையை வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றினை செய்துகொண்டுள்ளது.

TATA ரக வர்த்தக வாகனங்கள் எவற்றையும் மாதாந்த வாடகை கொள்வனவு அடிப்படையில் பெறுவதில் ஆர்வமுள்ள எந்தவொரு தனிநபரோ, வர்த்தக நிறுவனமோ ரூபா 100,000 நிதியிடலுக்கு மாதாந்தம் வற் வரி உள்ளடங்கலாக ரூபா 2554ஐ ஐந்து வருடங்களுக்கு செலுத்துதல் வேண்டும். இது தொடர்பில் நுகர்வோர் வங்கிச் செயற்பாடுகள் மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அமானா வங்கியின் துணைத் தலைவர் சித்தீக் அக்பர் கூறுகையில், 'கடந்த ஏழு தசாப்தங்களாக மோட்டார் வாகன தொழிற்துறையில் உயர்நிலையில் வைத்து மதிக்கப்பட்டுவரும் ஒரு கம்பனியான DIMO வுடன் பங்காளித்துவத்தை ஏற்படுத்திக்கொள்வதில் அமானா வங்கி மகிழ்ச்சியடைகின்றது. வர்த்தகத்துறை நோக்கங்களுக்கான வாகனங்களுக்கான தேவைகள் அதிகரித்துவருகின்ற இக்காலப்பகுதியில் கவர்ச்சிகரமான நிதிக்குத்தகைகளை வழங்கி ஒத்துழைப்பதில் அமானா வங்கிஆர்வம் கொண்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

மேற்படி இணைவாற்றல் பேறு தொடர்பில் TATA வர்த்தக வாகன விற்பனைக்கு பொறுப்பான DIMO பொது முகாமையாளர் விஜித பண்டார கூறுகையில், 'தனித்துவமான ஒரு நிதிவழங்கல் திட்டத்தை முன்னெடுத்துவரும் அமானா வங்கி போன்ற ஒரு பங்காளியுடன் கைகோர்த்துச் செயற்படுவது பெரு மகிழ்ச்சிக்குரியது. DIMO நிறுவனம் இலங்கையில் வுயுவுயு வாகனங்களின் ஏகமுகவரும் விநியோகத்தினருமாக உள்ள அதேவேளை நாம் இலங்கையின் போக்குவரத்து மற்றும் வழங்கல் துறையை மேம்படுத்துவதன் ஊடாக இளைஞர்களுக்கு சுயதொழில் வாய்ப்பையும் வழங்கிவருகின்றோம்' என்றார்.

அமானா வங்கியின் குத்தகை தொடர்பான கொள்கைகள் இஜாரா அடிப்படை கொண்டவை. இதன் பிரகாரம் வாடிக்கையாளருக்கு தேவையான வாகனத்தை வங்கி கொள்வனவு செய்வதுடன் அதனை வாடிக்கையாளருக்கு வாடகை அடிப்படையில் வழங்கவும் செய்கிறது. குத்தகை காலம் முடிவுற்ற நிலையில் வங்கி - வாகனத்தை வாடிக்கையாளருக்கு நன்கொடையாக வழங்கும் போது அவர் அதன் முழு உரிமையாளர் ஆவார். அவசியமாயின் மாதாந்த காப்புறுதி கொடுப்பனவுகளும் ஏற்பாடு செய்யப்படும்.

TATA ரக வாகனங்கள் வேன்கள், பார ஊர்திகள், பஸ் வண்டிகள் உட்பட்ட வர்த்தக வாகனங்களை உள்ளடக்குகின்றன. பார வண்டிகள் 600 கிலோ தொடக்கம் 40 தொன்கள் வரை ஏற்படக்கூடியன வாகவும் ஐந்தரை அடி தொடக்கம் 23 அடிவரைக்கும் நீளமுள்ளனவாகவும் உள்ளன. பயணிகள் வண்டிகள் 16 தொடக்கம் 57 இருக்கைகள் வரை கொண்ட வெவ்வேறு கொள்ளளவு உடையனவாகும். TATA வாகனங்கள் DIMO உத்தரவாதமுடையவை. நாடு முழுவதிலுமுள்ள விற்பனை நிலையங்களில், உதிரிப்பாகங்கள் பெறமுடியும். மேலும் 24 மணிநேர வீதிப்பாதுகாப்பு, வாடிக்கை சேவை வழங்குகின்றது.

இஸ்லாமிய வங்கி முறையில் இயங்கும் இலங்கையின் முதலாவது வர்த்தக வங்கி அமானாவாகும். செயற்திறன் மிக்க பங்கீடுபாட்டாளர்கள், பாங்க் இஸ்லாம் மலேசியா பர்ஹாட், சவுதி அரேபியாவின் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, பங்களதேஷ் ஏ.பி.வங்கி ஆகியவற்றின் உறுதிமிக்க ஆதரவுடன் வலுப்பெற்று திகழும் அமானாவங்கி இலங்கையின் வங்கித்துறையில் ஒரு சாதனை மிக்க பயணத்தை மேற்கொண்டு வருகின்றது. ஷரியா வங்கியியல் முறைமையை கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ள அமானாவங்கி இந்த எண்ணக்கருவை நாட்டின் அனைத்து சமூகத்தினர் மத்தியிலும் முன்னெடுத்துவருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .