2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

பொது சுகாதார துறையை அபிவிருத்தி செய்ய உலக வங்கி மூலம் 200 மில்லியன் அமொ.டொ. நிதியுதவி

Kogilavani   / 2013 மார்ச் 29 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இரண்டாவது சுகாதாரத்துறை அபிவிருத்தி திட்டத்தை (SHSDP) முன்னெடுக்கும் வகையில் சலுகை அடிப்படையில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க உலக வங்கி தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் இலங்கை அரசாங்கத்துக்கு நாட்டிலுள்ள 21 மில்லியன் மக்களுக்கு அவசியமான சுகாதார சேவைகளை விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விசேடமாக பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் வசதிகள் குறைந்த, பொது சேவைகளில் தங்கியிருப்பவர்களுக்கு அதிகளவு அனுகூலங்களை வழங்கும் வகையில் இந்த திட்டம் அமைந்திருக்கும்.

இந்த திட்டத்துக்கு அமைவாக, நவீன மயப்படுத்தப்பட்ட உலகத்தரம் வாய்ந்த சுகாதார சேவைகள் நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்துக்கு அமைவாக, 190 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சுகாதார அமைச்சின் மூலம் அண்மையில் தயாரிக்கப்பட்ட 2013 – 2017 வரை தேசிய சுகாதார அபிவிருத்தி திட்டத்துக்கும், எஞ்சிய 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சுகாதார துறையின் செயற்திறனை அதிகரிக்கும் வகையில், பராமரிப்பு தரத்தை அதிகரிக்கும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளை சுகாதார துறையில் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்காக வழங்கப்படவுள்ளன.

இந்த கடன் தொகைக்கு 1.25 வீதம் வருட வட்டி அறவிடப்படவுள்ளதுடன், 20 வருடங்களில் மீள செலுத்தக்கூடிய வகையில் 5 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட கடனாக வழங்கப்படவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .