2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இன்பொடெல் 2013 கண்காட்சியில் அதிசிறந்த காட்சிக்கூடத்திற்கான விருது இக்டாவுக்கு

A.P.Mathan   / 2013 நவம்பர் 20 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


தென் ஆசியாவினதும் இலங்கையினதும் மிகப்பெரிய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப கண்காட்சியான இன்பொடெல் 2013 கண்காட்சியில் இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் (இக்டா) கண்காட்சிக் கூடம் மிக ஆக்கபூர்வமான கண்காட்சிக் கூடமென்ற விருதைப் பெற்றது. இதற்கு முன்னரும் இக்டா பல தடவைகள் இவ்விருதினைப் பெற்றுள்ளது. 
 
இக் கண்காட்சி கொழும்பிலுள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் ஒக்டோபர் 24லிருந்து 27 வரை இடம் பெற்றது. இக்டா தகவல் தொழில்நுட்பத்தினால் மெருகூட்டப்பட்ட செயற் திட்டங்களை மிக ஆக்கபூர்வமானவிதத்திலும் கவர்ச்சிகரமாகவும் கண்காட்சிக் கூடத்தி;ல் மக்களுக்கு காண்பித்தது. இதனால் இக்டாவுக்கு இவ் விருது வழங்கப்பட்டது. இரு வருடங்களுக்கொரு முறை நடத்தப்படும் இக் கண்காட்சி இலங்கைத் தகவல் தொழில்நுட்ப கைத்தொழில் சம்மேளனத்தினால் (பிடிஸ்) ஒழுங்குசெய்யப்பட்டது.
 
இக்கண்காட்சியின்போது தகவல் தொழில்நுட்ப தகவல் தொழில்நுட்பத்தினால் வலுவூட்டப்பட்ட     சேவைத்துறை மற்றும் தேசிய தகவல் தொழில்நுட்ப சிறிய மற்றும் நடுத்தர வணிக இணைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உள்ளடங்கும் 18 சிறிய மற்றும் நடுத்தர தகவல் தொடர்பாடல்  தொழில்நுட்ப வணிக நிறுவனங்களுக்காக இக்டா ஒரு பொதுக் கூடாரத்தை ஒழுங்கு செய்திருந்தது சிறப்பிற்குரியதாகும். 
 
இன்பொடெல் கண்காட்சியில் பங்குபற்றியவர்களுக்கு வௌ;வேறான மென்பொருள் உற்பத்திகளை மற்றும் சேவை வழங்குநர்களை ஒரு பொதுக் கூடாரமொன்றில் கண்டு செயல்படக் கிடைத்த முதல் தடைவ இதுவாகும். நிதி தொடர்பான தகவல், இணைய கேள்வி கோரல், தேசிய மொழி மென்பொருள், தானியங்கி முறைமைகள், வணிக தேடுதல் பொறிகள், தொழில் முயற்சி மேம்பாடு, சில்லறை மென்பொருள், தேடல் பொறி திறமைப்படுத்துதல், இ-கற்கை, இ-வாசிப்பு, சரக்கு முகாமைத்துவ முறைமைகள் ஆகியவை.
 
'வாழ்க்கைகளை இலகுவாக்கல்' என்ற தலைப்பைக்கொண்ட இன்பொடெல் 2013 இம் முறை இக்டாவினால் கொழும்பில் ஒழுங்குபடுத்தப்பட்ட 2013 உலக உச்சி விருதில் வெற்றிபெற்றவர்களின் உலக ஒன்றுசேரலுக்குச் சமாந்தரமாக நடைபெற்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .