2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சீனாவின் 300 போக்குவரத்து முகவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய தீர்மானம்

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 23 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் 300 போக்குவரத்து முகவர்கள் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ள அனுப்பி வைப்பதாக சீனாவின் பீஜிங் சுற்றுலா அபிவிருத்திக்கான நகரசபை சம்மேளனத்தின் உப தலைவர் சொங் யு, இலங்கை சுற்றுலா சபையின் தலைவர் பாஷ்வர குணரத்னவுக்கு உறுதியளித்திருந்தார். 
 
இந்த விஜயத்தின் நோக்கம், சீனாவின் போக்குவரத்து முகவர்களுக்கு இலங்கையில் காணப்படும் சுற்றுலா வசதிகள் குறித்த ஆரம்ப கட்ட அறிவை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இரு தரப்பினருக்குமிடையிலான சந்திப்பொன்று அண்மையில் சீனாவில் இடம்பெற்ற இலங்கையின் கண்காட்சி நிகழ்வின் போது இடம்பெற்றது.
 
இலங்கையின் சுற்றுலா நடவடிக்கைகளை சீனாவில் பிரபல்யப்படுத்துவதற்கான தம்மாலான முழுமையான உதவிகளை வழங்க தாம் தயாராகவிருப்பதாக சொங் யு உறுதி வழங்கியிருந்தார். சீன நாட்டவர்களை இலக்காக கொண்டு தொடர்ச்சியான விழிப்புணர்வு செயற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா சபை அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .