2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஜூலை மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை 9.5 வீதத்தால் அதிகரிப்பு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 28 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜுலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 9.5 வீதத்தால் அதிகரித்து 98,944 ஆக பதிவாகியிருந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் மூலம் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் ஜுலை மாதத்தில் வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 12.5 வீதத்தால் அதிகரித்து காணப்பட்டது. இதில் இந்தியா, ஜேர்மனி மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்த சுற்றுலாப்பயணிகள் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்சி காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .