2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

7 NAFLIA மாநாட்டில் பெருமளவானோர் பங்கேற்பு

Gavitha   / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயுள் காப்புறுதி ஆலோசகர்களுக்கான தேசிய மன்றம் (NAFLIA) அதன் 7ஆவது வருடாந்த மாநாட்டை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH), அண்மையில் நடத்தியது.

இதில், ஆயிரத்துக்கும் அதிகமான ஆயுள் காப்புறுதி ஆலோசகர்களும், விற்பனைப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இலங்கை காப்புறுதிச் சங்கத்தின்  (IASL) சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைப் பிரிவு இதனை ஏற்பாடு செய்திருந்தது. 'இலங்கையர்கள் அனைவரும் காப்புறுதி செய்யப்படும் நாள்' எனும் தொனிப் பொருளில் இந்நிகழ்வு எற்பாடு செய்யப்பட்டது.

மங்களகரமான ஆரம்ப வைபவத்தைத் தொடர்ந்து, இலங்கைக் காப்புறுதிச் சங்கத்தின் பணிப்பாளரும், யூனியன் அஷூரன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டேர்க் பெரெய்ரா உரையாற்றினார். அவர் தனது உரையில், அபிலாஷைகளுடன் கூடிய சிந்தனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 'நாம் பெரிதாகச் சிந்திக்க வேண்டும்.

நாம் அதிக ஆர்வமும் அபிலாஷைகளும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு இலங்கையரையும் நாம் கவரப் போகின்றோம். உழைக்கும் சனத்தொகையில் 33 மூத்தோடு நாம் திருப்தி காண முடியாது. அதேபோல், ஒட்டு மொத்த சமூகத்தின் 12.5% த்தோடும் நாம் திருப்தி காண முடியாது. இந்த இலக்கங்கள் விரைவில் மாற்றப்பட வேண்டும்.

இத்தகைய நிகழ்வுகள் காப்புறுதித் துறையின் ஆற்றலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது' என்று பெரெய்ரா நம்பிக்கையுடன் கூறினார்.கௌரவ அதிதியாகப் பங்கேற்று உரையாற்றிய LIMRA சர்வதேச நிலையத்தின் பிரதான பயிற்றுவிப்பாளர் திராஜ் மல்ஹோத்ரா தேவையை அடிப்படையாகக் கொண்ட விற்பனைகள் மற்றும் வாடிக்கையாளருடன் நம்பிக்கையைக் கட்டி எழுப்ப வேண்டியதன் அவசியம் என்பன பற்றிய தனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X