2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

‘NASCO 2016’இல் ஜட் 2 விருதுகள்

Gavitha   / 2016 நவம்பர் 27 , பி.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் அமைப்பாக்க வசதி மற்றும் முடிவாக்க துறைசார் சந்தையில் திகழ்கின்ற JAT ஹோல்டிங்ஸ் நிறுவனமானது அண்மையில் வோட்டர்ஸ் எட்ஜ் ஹொட்டலில் நடைபெற்ற தேசிய விற்பனைகள் காங்கிரஸ் (NASCO) 2016 விருது வழங்கல் நிகழ்வுக்கு அனுசரணை அளித்தது.  

இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தினால் (SLIM) ஏற்பாடு செய்யப்பட்ட NASCO விருதுகள் நிகழ்வானது, விற்பனைசார் ஊழியர்களின் முன்முயற்சிகள் மற்றும் செயற்பாடுகைள அங்கிகரித்துப் பாராட்டுவதற்காக, முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முதன்மையான நிகழ்வாக காணப்படுகின்றது.  கம்பனிகள் தம்மிடம் பணிபுரியும் மிகச் சிறந்த செயலாற்றலுள்ள விற்பனைத் துறை ஊழியர்களையும் தனிநபர்களையும் அடையாளம் கண்டு கொள்வதற்கு வசதியேற்படுத்திக் கொடுக்கும்  தளமேடையாக NASCO செயற்படுகின்றது

 இதன் மூலம், அந்தக் கம்பனிகள் குறிப்பிட்ட ஊழியர்களுக்குப் பதவியுயர்வு வழங்கி, அவர்களைத் தமது தொழிலில் அடுத்த மட்டத்துக்கு உயர்த்த முடியும்.  “விற்பனைத் துறையில் பணியாற்றும் தனிநபர்களின் முயற்சிகள் மற்றும் கடின உழைப்பு போன்றவற்றை வெளிச்சம்போட்டு காட்டும் விதத்திலமைந்த NASCO 2016 விருது வழங்கல் நிகழ்வுக்கு ஒர் அனுசரணையாளராத் திகழ்வதையிட்டு JAT ஹோல்டிங்ஸ் நிறுவனம் பெருமிதம் அடைகின்றது.

தனிநபர்கள் உரிய நேரத்தில் அங்கிகாரம் பெறுவதை ஊக்கமளிப்பதும் உறுதிப்படுத்துவதும் மட்டுமன்றி, தமது தொழிலில் பெரிய சாதனைகளை நிகழ்த்துவதற்கு ஊக்குவிப்பதிலும் JAT முழுவதுமாகத் தன்னை ஈடுபடுத்திச் செயற்படுகின்றது என்பதையும்  விருது வழங்கல் தொடர்பில், JAT நிறுவனம் வெளிப்படுத்தியிருக்கும் இந்த அர்ப்பணிப்பு குறித்துரைக்கின்றது” என்று JAT ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஏலியன் குணவர்தன தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .