
இலங்கையில் ஆண்கள் ஆடைத் துறையில் நிபுணத்துவம் பெற்ற முன்னணி நிறுவனமாக திகழும் ஹமீடியா, 'WOLY' பாதணி பராமரிப்பு உற்பத்திகளை இலங்கைச் சந்தையில் அறிமுகம் செய்வதன் மூலம் இலங்கையரின் பாதணிகளை மினுமினுப்பாக்கும் கலையை மேலும் உயர்ந்த மட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் ஜேர்மனின் மெல்வோ குழுமத்துடன் கைகோர்த்துள்ளது.
ஹமீடியா முகாமைத்துவப் பணிப்பாளர் பௌசுல் ஹமீட் கூறுகையில், 'பாதணிகள் என்பது வெறுமனே காலணிகள் என்பதற்கும் அப்பால் நிறைய அர்த்தங்களை உள்ளடக்கியதாகும். ஒருவரது தனிப்பட்ட குணவியல்பு மற்றும் வாழ்க்கையில் அவரது நடத்தை போன்றவற்றை வெளிப்படுத்துவனவாக இவை காணப்படுகின்றன. நீங்கள் யார் என்பதையும், குறிப்பிட்ட நேரங்களில் நீங்கள் எதற்காக முன்னிற்கின்றீர்கள் என்பதையும் உங்களது பாதணிகள் உலகுக்கு எடுத்துரைக்கின்றன. ஆடலுக்கான 'பெலரீனா' பாதணியாக இருந்தாலும், அலுவலக பாவனைக்கான பாதணி என்றாலும், ஓடுவதற்கான பாதணி அல்லது நீண்ட நடைப் பயணத்திற்கான பாதணியாக இருந்தாலும் அது ஒருவரது தனிப்பட்ட ஆளுமைக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. பாதணியை அடிக்கடி பயன்படுத்துகின்ற போது உங்களது பாதணி அதிகமான நலிவுக்கு உட்படுகின்றது. தூசிகள், சூழல் ரீதியான பாதிப்புக்கள் மற்றும் நேரடியாக சூரியஒளி விழுதல் ஆகியவற்றின் காரணமாக பாதணிகள் மினுமினுப்புத் தன்மையை மிக விரைவாக இழந்து போகலாம். எனவேதான் அவற்றை முறையான வழியில் பராமரித்தல் அவசியமாகவுள்ளது' என்று குறிப்பிட்டார்.
இலங்கைக்கான ஏக விநியோகஸ்தர்களாக ஹமீடியா நிறுவனம் திகழ்கின்றமையினால், சுப்பர் மார்க்கட்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களை உள்ளடக்கிய விரிவடைந்து செல்லும் விநியோக வலையமைப்பின் ஊடாக WOLY உற்பத்திகள் பொது மக்களுக்கு கிடைக்கக் கூடியதாவுள்ளன. சுமார் 80 வருட காலமாக 'தராதரம்' ஆனது கட்டுக்கடங்காத உணர்ச்சியாக மாற்றியமைக்கப்பட்ட WOLY உற்பத்தி வகைகள் மிகச் சிறந்த பராமரிப்பையும், பாதுகாப்பையும் அனைத்து விதமான தோலுற்பத்திகளுக்கும் வழங்குகின்றன.
'WOLY ஆனது வெறுமனே பாதணிகளுக்கு மட்டுமான பராமரிப்பு உற்பத்தி என்ற வரையறையை கடந்து - பைகள், இடுப்புப்பட்டிகள் மற்றும் அணிகலன்கள் போன்ற அனைத்து விதமான தோலுற்பத்திகளுக்கும் பொருத்தமானதாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வருடத்தின் முற்பகுதியில் இலங்கைச் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, WOLY வர்த்தக குறியீட்டிலான உற்பத்திகளில் காணப்படும் 'கொடுக்கும் பணத்திற்கு சிறந்த பெறுமதி' மற்றும் 'உயர் தராதரம்' என்பவற்றுக்காக அவ்வுற்பத்திகள் உள்நாட்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மக்கள் எந்தளவுக்கு தத்தமது ஆடைகள் விடயத்தில் கவனம் செலுத்திச் செயற்படுகின்றார்களோ, தற்போது அந்தளவுக்கு அவர்கள் தமது தோலுற்பத்திகளின் பராமரிப்பு தொடர்பிலும் அக்கறை உடையவர்களாக இருக்கின்றனர். நீங்கள் பாதணியை அணிந்திருக்கையில் நல்லுணர்வைப் பெறுவதற்கு WOLY உங்களுக்கு உதவுகின்றது' என்று ஹமீட் மேலும் கூறினார்.
1861ஆம் ஆண்டில், அடொல்ஃப் சற்றர் தனது வணிக ரீதியிலான பயணத்தின் தூண்டுதலின் காரணமாக கடுமையாக பாவிக்கப்பட்ட காலணிகளுக்கான மிகச் சிறந்த பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நுட்பத்தை கண்டறிந்தார். சுவிஸ் நாட்டின் துர்காவு மாகாணத்திலுள்ள ஒபர்ஹோபன் பிரதேசத்தில் கடை ஒன்றை அவர் திறந்து, பாதணிகளுக்கான மினுமினுப்பாக்கி (Shoe Polish) உற்பத்தி நடவடிக்கையை வெற்றிகரமாக ஆரம்பித்து வைத்தார். செயற்றிறன் காரணமாக இவ்வுற்பத்தியானது வாடிக்கையாளர்களை தம்பக்கம் கவர்ந்திழுத்த அதேவேளை, தராதரத்திற்காக பல்வேறு விருதுகளையும் தட்டிச் சென்றுள்ளது.
1931ஆம் ஆண்டு 'WOLY' என்ற வர்த்தகக் குறியீட்டின் கீழ் விஷேட பாதணி பராமரிப்பு உற்பத்தி வகைகள் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டன. கண்ணாடிக் குவளையில் அடைக்கப்பட்ட WOLY எமல்சன் கிறீமே இந்நிறுவனத்தின் பிரபலமான உற்பத்தியாக திகழ்ந்தது. அப்போது முதற்கொண்டு இவ்வுற்பத்தியானது தொடர்ச்சியாக செப்பனிடப்பட்டது. ஆனாலும், அதனது அடிப்படை சூத்திரம் தொடர்ந்தும் மாறாதிருக்கின்றது.
அனுபவம் மற்றும் தொடர்ச்சியான புத்தாக்கம் ஆகியவற்றின் துணையுடன் தோல் தயாரிப்புக்களின் பராமரிப்பு தொடர்பான அனைத்துத் தேவைகளையும் நிவர்த்தி செய்யக்கூடிய பல்வகைப்பட்ட உற்பத்திகள் கடந்த பல வருட காலப்பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுள் - தூய்மைப்படுத்தல், பதப்படுத்தல், மினுமினுப்பாக்குதல், நீர் உட்புகாவண்ணம் தடுத்தல், வர்ணத்திற்கு புத்தெழில் ஊட்டுதல் ஆகியவற்றுக்கான உற்பத்திகளும் உள்ளடங்கும். இந்தச் செயன்முறையில், சூத்திரங்கள் மட்டுமன்றி பிரயோக நுட்பங்களும் கூட மென்மேலும் விருத்தி செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், தோலுற்பத்திகள் மற்றும் துணி வகைகளின் பராமரிப்புக்காக நம்பிக்கையை வென்ற வர்த்தகக் குறியீடாக WOLY இன்று முன்னேறியுள்ளது.
2011ஆம் ஆண்டில் பரந்தளவான பொதியிடலுடனான மீள் அறிமுகமானது நவீனத்துவம், உயர் தன்மையுடைய தோற்றப்பாடு போன்றவற்றை WOLY வர்த்தக குறியீட்டிற்கு வழங்கியது. அதுமட்டுமன்றி, பயன்பாட்டுத்திறன் மற்றும் சூழல் பாதுகாப்பில் புதிய தராதரங்களையும் நிறுவியது. இதனது பரந்துபட்ட வகைகளிலான பதமாக்கிகள் (கண்டிஷனர்), விஷேட உற்பத்திகள் மற்றும் சௌகரியமளிக்கும் தயாரிப்புக்கள் போன்றவை உலகெங்கும் வாழ்கின்ற நிபுணர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் முதல்தெரிவாக WOLY வர்த்தக குறியீட்டை முன்னேற்றியுள்ளன.