2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

20 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் RN

Gavitha   / 2017 ஜனவரி 31 , பி.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

RN Constructions (Pvt) Ltd, தனது 20ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக, தனது ஊழியர்கள், தெரிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் ஆலோசகர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் விசேட நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது.  

RN நிறுவனங்கள் குழுமமானது, தனது குழுமத்தின் கீழுள்ள ஆறு துறைசார் நிபுணத்துவ நிறுவனங்களின் மூலமாக, தொழில்நுட்பரீதியாக மேம்பட்ட, உயர் தரத்திலான கட்டுமானத் தீர்வுகளை வழங்கிவருகின்றது. வெறும் 3 ஊழியர்களுடன் 1996ஆம் ஆண்டில் தனது தொழிற்பாடுகளை ஆரம்பித்திருந்த RN Constructions (Pvt) ltd, என்ற தாய்நிறுவனம், தற்போதைய பணிப்பாளர் சபைத் தலைவரும், தகைமைப் பெற்ற குடிசார் பொறியியலாளருமான ருவான் எதிரிசிங்க மற்றும் அவரது சகோதரரான நிஷhந்த ஆகிய இரு சகோதரர்களின் தொலைநோக்கு கொண்ட தலைமைத்துவ சிந்தனையுடன் தனது பயணத்தை ஆரம்பித்திருந்தது.  

தொழிற்சாலை மற்றும் களஞ்சியசாலைக் கட்டடங்கள், வர்த்தக பயன்பாட்டுக் கட்டடங்கள், வீடமைப்புச் செயற்றிட்டங்கள், ஹொட்டல்கள், வைத்தியசாலைகள், வீதிகள், பாலங்கள் மற்றும் தொலைதொடர்பாடல் கோபுரங்கள் போன்றவற்றின் கட்டுமானத்தில் RN குழுமம் நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X