2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

2020இல் சுற்றுலா பயணிகளை கவரத் திட்டம்

Gavitha   / 2017 ஜனவரி 09 , பி.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2020இல் இலங்கைக்கு நான்கு மில்லியன் சுற்றுலாப் பயணிகளைக் கவரத்திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி, கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். 2016 இல் இலங்கைக்கு மொத்தமாக 2,058,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர்.  

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 17 சதவீத அதிகரிப்பு என்பதுடன், நடப்பு ஆண்டிலும் நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், சுற்றுலாப் பயணிகள் மேற்கொள்ளும் செலவீனங்களை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

இருந்த போதிலும், நடப்பு ஆண்டின் முற்பகுதியில், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை காரணமாக, இவ்வாறு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X