Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 17 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்களது குடும்பத்தினர் மற்றும் அன்பிற்குரியவர்களின் எதிர்காலம் பிரகாசிப்பதற்காக, வெளிநாடுகளில் பணியாற்றிக்கொண்டு, தாங்கள் உழைக்கும் பணத்தை இலங்கைக்கு அனுப்பிவைக்கின்றவர்களின் நலன் கருதி, சம்பத் வங்கி அறிமுகப்படுத்தியிருந்த சம்பத் eRemittance - “காஷ் வாசி 4” ஊக்குவிப்புத்திட்டத்தின் மற்றுமொரு சுற்றின் வெற்றியாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஓகஸ்ட், செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கான வெற்றியாளர்கள் தங்களது பரிசுத்தொகையான தலா ஒரு இலட்சம் ரூபாய் பணப்பரிசை சம்பத் வங்கிக் கிளைகளின் மூலமாகப் பெற்றுள்ளனர்.
சம்பத் eRemittance ஊக்குவிப்பின் ஓகஸ்ட் மாத வெற்றியாளராக நிக்கவரெட்டியசைச் சேர்ந்த குருப்பு முதியான்சலாகே பொடிபண்டா, செப்டெம்பர் மாத வெற்றியாளராக வெலிமடையைச் சேர்ந்த டபிள்யூ. எம். சுவர்ணலதா, ஒக்டோபர் மாதத்தின் வெற்றியாளராக அநுராதபுரத்தைச் சேர்ந்த எச்.ஜி. லீலாவதி ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
சம்பத் eRemittance- “காஷ் வாசி 4” செப்டெம்பர் மாதத்துக்கான வெற்றியாளராக ஒரு இலட்சம் ரூபாய் பணப்பரிசை வென்றுகொண்ட வெலிமடையைச் சேர்ந்த டபிள்யூ. எம். சுவர்ணலதா, இந்த வெற்றி தொடர்பில் மிகவும் பூரிப்புடன் கருத்தைப் பகிர்ந்து கொள்கையில், “வெளிநாட்டுக்கு சென்று உழைத்து, எமது எதிர்காலம் பிரகாசமாக அமைவதற்கு, நாம் உழைத்த பணத்தை இலங்கைக்கு அனுப்பிவைப்பதற்கு மிகுந்த நம்பிக்கையுடன் சம்பத் வங்கியைத் தெரிவுசெய்திருந்தேன். காஷ் வாசி ஊக்குவிப்பின் மூலமாக இந்தளவுத் தொகைப் பரிசாக கிடைக்கப்பெற்றமையால் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. ஏதிர்காலம் பிரகாசிப்பதற்காகக் கஷ்டப்பட்டு உழைக்கின்ற எமக்கு, இந்த வழியில் கைகொடுத்துள்ள சம்பத் வங்கிக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்,” என்று குறிப்பிட்டார்.
36 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
51 minute ago