Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 நவம்பர் 16 , பி.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
சந்தை ஆராய்ச்சி மற்றும் பயனர் அனுபவம் தொடர்பான ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்றுள்ள GfK அறிக்கையின் பிரகாரம், 3ஆவது காலாண்டில் Hawei சந்தைப்பங்கை 30% இற்கும் மேலாக அதிகரித்துக்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் திறன்பேசி சந்தைப் பிரிவில் Huawei தற்போது இரண்டாவது ஸ்தானத்தில் உள்ளது. மேம்பட்ட தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் கூட்டு முயற்சி ஆகியவற்றின் மூலமாக, Huawei தனது வாடிக்கையாளர்களுக்கு முன்னிலை வகிக்கும் தொழில்நுட்ப உற்பத்திகளைத் தொடர்ந்தும் வழங்கி வருகின்றது. நுகர்வோர் சாதனங்கள் தொடர்பான எதிர்கால போக்கு மற்றும் பங்காளர்களின் மேம்பட்ட தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கிடையில் தற்போது நிகழ்ந்து வருகின்ற ஒன்றிணைப்பு, புதிய, நவீன உற்பத்திகள் மற்றும் வியப்பூட்டும் பயனர் அனுபவத்தைத் தோற்றுவிக்கும்.
இந்தச் சாதனைத் தொடர்பில் கருத்து வெளியிட்ட, இலங்கையில் Huawei 30% சந்தைப்பங்கு சாதனங்களுக்கான உள்நாட்டு தலைமை அதிகாரியான ஹென்றி லியு, “இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் Huawei 28% சந்தைப் பங்கினை எட்டியிருந்தது. 3ஆவது காலாண்டில் இந்த எண்ணிக்கையானது 30% ஐ எட்டியுள்ளதாக, GfK அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெகு விரைவில் முதலாவது ஸ்தானத்தை அடைவதற்கான ஆற்றலை நாம் கொண்டுள்ளோம் என்பதில் நாம் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளோம்” என்று குறிப்பிட்டார்.
ஒரு வர்த்தகநாமம் என்ற வகையில், Huawei ஆனது இலக்குத் தொடர்பானக் கடுமையான உள்வாங்கும் பாணி மற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மீதான முதலீடு ஆகிய மூலோபாயங்களின் மீது உயர்ந்த நம்பிக்கை கொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago