2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'வர்ண பூஜா' முன்னெடுப்புக்கு ஜனாதிபதி பாராட்டு

A.P.Mathan   / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

'ரொபியலக்' வர்ணப்பூச்சு (பெயின்ட்) உற்பத்தியாளராகவும் சந்தைப்படுத்துனராகவும் திகழ்கின்ற லங்கெம் சிலோன் பி.எல்.சி. நிறுவனமானது, தொடாச்சியாக 11ஆவது வருடமாகவும் கண்டி தலதா மாளிகை கட்டிடத் தொகுதிக்கு முழுமையாக வர்ணம் பூசியமைக்காக அண்மையில் பாராட்டப்பட்டுள்ளது. 

கண்டி எசல பெரஹரவின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்த ஒவ்வொருவருக்கும் நன்றி பாராட்டும் நிகழ்வு கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. 

பாராட்டை வெளிப்படுத்தும் விதத்தில் (பெயர் பொறிக்கப்பட்ட) படிகத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, லங்கெம் சிலோன் பி.எல்.சி. நிறுவனத்தின் பணிப்பாளர் றுவான் ரி. வீரசிங்கவிடம் கையளிப்பதை புகைப்படத்தில் காணலாம். 

'வர்ணப் பூஜா' முன்னெடுப்பானது இப்போது ஒரு பாராம்பரியமாக மாறியிருக்கின்ற அதேவேளை, வருடாந்த எசல பெரஹரவுக்கு முன்னதாக தலாதா மாளிகையில் மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறுபட்ட அனுஷ்டானங்களில் ஒரு அங்கமாகவும் திகழ்கின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X