2026 மே 07, வியாழக்கிழமை

15 வருட பூர்த்தியை கொண்டாடும் Raffles Colombo

A.P.Mathan   / 2014 ஜூன் 14 , மு.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பின் முன்னணி உணவு விநியோகத்தர்களாக கருதப்படும் Raffles கேட்டரிங் சேவை தனது 15 வருட பூர்த்தியை கொண்டாடுகிறது. Raffles குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான Raffles கேட்டரிங், 1999 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்டது முதல், நிறுவனசார், தனிநபர் மற்றும் பொது நிகழ்வுகளுக்கான உணவு விநியோக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

தமது புத்தாக்க மற்றும் ஆக்கபூர்வமான உணவு வகைகளுடன், உலகின் பல பாகங்களையும் சேர்ந்த வெவ்வேறு உணவு வகைகளை Raffles விநியோகித்து வருகிறது. 'சிறந்த உணவு வகைகளை விநியோகிப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். அனைவரும் நிச்சயமாக அவற்றை ரசித்து உண்கின்றனர். எனவே கூட்டாண்மை நிகழ்வு ஒன்றுக்காக உணவு வகைகளை பெற்றுக் கொள்வது என்பது சிக்கலான விடயமாக அமைந்திருக்காது' என Raffles கொன்சொலிடேடட் முகாமைத்துவ பணிப்பாளர் டோனி பொஹொரன் தெரிவித்தார்.

'இது மிகவும் களிப்பூட்டும் பரிபூரண பயணமாகும், இது எமக்கு சிறந்த அனுபவத்தை வழங்கியுள்ளதுடன், உணவு விநியோகம் மட்டுமல்லாமல், எமது வாடிக்கையாளர்களின் நிகழ்வு ஏற்பாடுகளுக்கு அமைய அவற்றை நிர்வகிப்பதற்கான வாய்ப்பையும் புரிந்துணர்வையும் எமக்கு வழங்கியுள்ளன' என்றார்.

இதற்கமைய, உணவு விநியோகத்துக்கு மேலதிகமாக, குழுமம் தனது விருந்தோம்பல் கல்வியகத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. Raffles Institute of Catering & Hotel Management (RICH) எனும் பெயரில் இயங்கும் இந்த கல்வியகம், தனது EKSP புலமைப்பரிசில் கற்கைகளுக்காக City & Guilds International மற்றும் கல்வி அமைச்சின் அனுமதியை பெற்றுள்ளது. சர்வதேச சமையல் கலை;, பேஸ்ரி மற்றும் பேக்கரி, உணவு மற்றும் பான வகை மற்றும் சமையலறை ஒழுங்குபடுத்தல்கள் மற்றும் முன் அலுவலக ஒழுங்குபடுத்தல்கள் போன்றவற்றை கற்பிக்கும் வகையில் கற்கை நெறிகளை முன்னெடுத்து வருகிறது. மதிய உணவு நடத்தை முறை, சாப்பாட்டு மேசை ஒழுங்குபடுத்தல் தொடர்பில் நான்கு மணித்தியால பயிற்சி போன்றன கூட்டாண்மை மற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

ஐந்து நட்சத்திர வெளியக உணவு விநியோக சேவை என்பது பரிபூரண விபரங்களுக்கான முழுமையான ஈடுபாட்டையும், சிந்தனைத்திறன் மற்றும் பசுமை ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு அவசியமான உணவு வகைகளை தயாரித்து விநியோகிப்பது மற்றும் அனுபவம் பெற்ற ஆளுமை நிறைந்த நிபுணர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

Raffles திருமண வைபவங்களுக்கும் உணவு விநியோக நடவடிக்கைகளை நட்சத்திர அந்தஸ்தில் முன்னெடுக்கிறது. இதற்காக Raffles அதிகளவு பிரபல்யம் பெற்றுள்ளதாக டோனி பொஹொரன் தெரிவித்தார். தற்போதைய நடைமுறையில் பெருமளவானோர் தமது விருந்தினர்களை தமது இல்லங்களில் உபசரிக்கவே அதிகம் விரும்புகின்றனர். வீடுகளுக்கு உணவு விநியோக சேவைகளை மேற்கொள்வதற்கான Raffles சிறந்த உணவு வகைகளை கொண்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .