2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

20 மில்லியன் ரூபா முதலீட்டில் ஆய்வுகூடத்தை நிறுவியுள்ள அட்லஸ்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 27 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

காகிதாதிகள் தயாரிப்புகள் உற்பத்தியில் நீண்ட காலமாக ஈடுபடும் முன்னணி வர்த்தக நாமமான அட்லஸ், பாடசாலை மற்றும் அலுவலக காகிதாதிகள் தயாரிப்புகளின் தரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் உயர் தரம் வாய்ந்த நவீன வசதிகளை கொண்ட ஆய்வு கூடமொன்றை நிறுவ முன்வந்துள்ளது.
 
இதற்காக மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் 20 மில்லியன் ரூபாவுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் அண்மையில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஆய்வு கூடத்தை கம்பனி வளாகத்தில் நிறுவாமல், பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவுவதற்கான தீர்மானத்தை மேற்கொண்டமையானது, உள்நாட்டு பொறியியல் திறமைகளை மேம்படுத்தும் நோக்கத்தை முன்னிறுத்தி உள்நாட்டு கல்விச் சூழலில் காணப்படும் வாய்ப்புக்களையும் கிடைக்கப்பெற்ற வளங்களையும் ஊக்குவித்து மேம்படுத்துவதன் மூலம் பிராந்திய ரீதியில் அவர்களை தேர்ச்சி நிலையில் வைத்திருக்க முடிவதாக அட்லஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. நிர்மல் மதநாயக்க தெரிவித்தார்.
 
இந்த அங்குரார்ப்பண வைபவத்தில் திரு. மதநாயக்க அவர்கள் கருத்து தெரிவிக்கையில், 'பல்கலைக்கழகத்துடன் அட்லஸ் கொண்டுள்ள தொடர்புகளின் மூலம் உள்நாட்டு பயிலுநர்களை தாம் பயிலும் புத்தக ரீதியிலான விடய தானங்களை செயன்முறைப்படுத்த வாய்ப்பு வழங்கப்படும். இதன் மூலம் மாணவர்களுக்கு நிலையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு வழிகாட்டுவதாக அமைந்திருப்பதுடன், எதிர்காலத்தில் அவர்களுக்கு தொழில் வாய்ப்பொன்றை பெற்றுக் கொள்வதற்கு வழிகாட்டுவதாகவும் அமைந்திருக்கும். உள்நாட்டு நிறுவனம் எனும் வகையில், சர்வதேச நாமத்தை எய்தியுள்ள எமது நிறுவனம், உள்நாட்டவர்களின் ஆளுமை மற்றும் திறமையில் அதிகம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், உள்நாட்டவர்களை சர்வதேச தரத்துக்கு கொண்டு செல்வதற்காக தன்னை மேலும் அர்ப்பணித்துள்ளது' என்றார். 
 
நுகர்வோரை மையப்படுத்திய இன்றைய சந்தை சூழலில், சிக்கனமான முறையில் உயர் தரம் வாய்ந்த பொருட்களை வழங்குவது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்த ஆய்வுகூடமானது, வலு மற்றும் நிதிச் சிக்கனமான பொருட்களை உற்பத்தி செய்வது தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்தவுள்ளதுடன், தற்போது சந்தையில் காணப்படும் பொருட்களுக்கு பெறுமதி சேர்த்து மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. 
 
பொறியியல், வடிவமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் மூன்று பிரிவுகளுக்கு அனுகூலம் கிட்டும் வகையில் அட்லஸ் ஆய்வு நிலையம் அமைந்துள்ளதுடன், நாட்டின் மேலும் சில நிறுவனங்களின் ஆய்வு நடவடிக்கைகளை இங்கு முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. உயர்ந்த ஆளுமை மற்றும் திறமை படைத்த பொறியியல் பீடமாக கருதப்படும், மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் உயர் தரம் வாய்ந்த நவீன தொழில்நுட்ப அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், பிராந்தியத்தில் காணப்படும் சிறந்த பல்கலைக்கழகமாக திகழ்வதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்ட வண்ணமுள்ளது.  
 
பல்கலைக்கழகத்துடனான அட்லஸ் உடன்படிக்கையானது, கம்பனியின் தொடர்ச்சியான சிறப்புத்தேர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதுடன், வர்த்தக நாமத்தின் தொடர்ச்சியான வெற்றிப்பயணத்துக்கு வழிகோலுவதாக அமைந்திருக்கும். புதிய வர்த்தகங்கள் மற்றும் உள்நாட்டு கல்வி செயற்பாடுகளுக்கும் இந்த ஆய்வு கூடம் பயன்படும் வகையில் அமைந்திருக்கும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .