2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்

Kogilavani   / 2013 மார்ச் 10 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அதிகளவு பங்களிப்புடன், கடந்த இரண்டு வாரங்களில் பதிவாகியிருந்த உயர்வான பெறுமதியை கடந்த வாரம் பங்குச்சந்தை பதிவு செய்திருந்தது.

முன்னைய வாரங்களில் ஏற்பட்டிருந்த சரிவு நிலைகளிலிருந்து மீண்டு, மீண்டும் உயர்வு பாதையில் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருந்தன.

கடந்த வாரத்தை பொறுத்தமட்டில் கொமர்ஷல் வங்கி, சம்பத் வங்கி, சிலோன் டுபாக்கோ போன்ற நிறுவனங்களின் பங்குகள் சிறந்த பெறுமதியை பெற்றிருந்தன. 

சிலோன் டுபாக்கோ நிறுவனத்தின் தலைமைத்துவத்தில் மாற்றம் இடம்பெறுகின்றமை குறித்த அறிவித்தல் வெளியாகியமையை தொடர்ந்து, இந்நிறுவனத்தின் பங்குகளில் சற்று ஈடுபாடு அதிகரித்ததை அவதானிக்க முடிந்தது.
 
கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5,691.39 ஆகவும், ளுரூP ஸ்ரீலங்கா 20 சுட்டி 3222.74 ஆகவும் அமைந்திருந்தன.

மார்ச் 4ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 6,742,202,997 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 22,599 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 21,212 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,387 ஆகவும் பதிவாகியிருந்தன.

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் மிரமர், நேஷன் லங்கா (உரிமைப்பங்குகள்), ஆசிரிசென்ரல், ஆர்பிகோ மற்றும் ஒஃபிஸ் எக்யுப்மன்ட் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

சிலோன் லெதர் (உரிமைப்பங்குகள்), பிசி பார்மா, சமசன் இன்டர்நட், பேருவெல வோல்கின் மற்றும் அகலவத்தை போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.

தங்கம் மற்றும் வெள்ளி விலை

கடந்த வாரம் தங்கத்தின் விலை 24 கெரட் பவுணொன்று 51,500.00 ரூபாவை அண்மித்து காணப்பட்டதாக தங்கநகை வட்டாரங்களின் மூலம் அறிய முடிந்தது. 22 கெரட் பவுணொன்று சராசரியாக 47,100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையிலும் சற்று வீழ்ச்சி ஏற்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.

வெள்ளி 1 கிலோகிராமின் சராசரி விலை 1450.00 ரூபாவை அண்மித்து காணப்பட்டதாக சந்தை அறிக்கைகள் தெரிவித்திருந்தன.


நாணய மாற்று விகிதம்

கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 128.87 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 193.78 ஆக காணப்பட்டிருந்தது. தொடர்ந்தும் ஸ்ரேளிங் பவுணுக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வாரமும் வீழ்ச்சியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .