2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

பின்தங்கிய பாடசாலைகளுக்கு தூய குடிநீர் வழங்கும் திட்டம்

A.P.Mathan   / 2013 மார்ச் 21 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


உள்நாட்டு சந்தையில் விற்பனைக்குள்ள முதல்தர நீர் பம்பியான 'ஆர்பிடெக்' மூலம் ஆர்பிடெக்-நெத் பாடசாலை குடிநீர் வழங்கல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பின்தங்கிய பாடசாலைகளுக்கு தூய குடிநீரை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. றிச்சர்ட் பீரிஸ் பிஎல்சி நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்துக்கு அமைவாக இலங்கையை சேர்ந்த பிள்ளைகளின் சுகாதார நலனை மேம்படுத்தவும், கல்வித்தரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில், சிங்கள வானொலி சேவையான நெத் எஃப்எம் உடன் இணைந்து இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக, எம்பிலிபிட்டியவை சேர்ந்த கொலொன்ன கனிஷ்ட பாடசாலைக்கு தூய குடிநீர் பெற்றுக் கொடுக்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்துக்கு ஆர்பிகோ நீர் தாங்கிகள் மற்றும் ஆர்பிகோ PVC நீர் குழாய்கள் பங்களிப்பை வழங்கியிருந்தன.

இந்த திட்டம் குறித்து நெத் எஃப்எம் வானொலியில் ஒலிபரப்பாகும் 'நெத் செரய' நிகழ்ச்சியில் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில், 100க்கும் அதிகமான பின்தங்கிய பாடசாலைகள் இதற்காக விண்ணப்பித்திருந்தன. இந்த திட்டத்துக்கு தெரிவு செய்வதற்கான தெரிவு நிபந்தனைகளாக கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை, கல்வி நிலை, ஆகக்குறைந்த வளங்கள் மற்றும் பாடசாலை அமைந்துள்ள மாவட்டம் போன்ற விபரங்கள் கருத்தில் கொள்ளப்பட்டிருந்தன. இதன் அடிப்படையில் எம்பிலிபிட்டியவை சேர்ந்த கொலன்ன கனிஷ்ட பாடசாலை தெரிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு இந்த பாடசாலையிலிருந்து தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக தோற்றிய 104 மாணவர்களில் 15 பேர் சித்தியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு மாணவர் 180 புள்ளிகளை பெற்றிருந்தமை விசேட அம்சமாகும்.

இது குறித்து றிச்சர்ட் பீரிஸ் நிறுவனத்தின் தேசிய உற்பத்தி மற்றும் விநியோக பிரிவின் முகாமைத்துவ பணிப்பாளர் சுனில் லியனகே கருத்து தெரிவிக்கையில், |ஆர்பிடெக்-நெத் பாடசாலை குடிநீர் வழங்கல் திட்டத்தின்' மூலம், தூய குடிநீரை பெற்றுக் கொள்வதற்கான முழுமையான நீர் கட்டமைப்பை அன்பளிப்பு செய்திருந்ததுடன், இந்த திட்டத்துக்காக தெரிவு செய்யப்பட்ட ஏனைய பாடசாலைகளுக்கு விரைவில் இந்த கட்டமைப்பு அன்பளிப்பு செய்யப்படவுள்ளது' என்றார்.

இந்த திட்டம் குறித்து றிச்சர்ட் பீரிஸ் டிஸ்ரிபியுசன் கம்பனி லிமிடெட்டின் தளபாடங்கள் விநியோக பிரிவின் பணிப்பாளரும் தலைமை செயற்பாட்டு அதிகாரி சாந்த குலரத்ன கருத்து தெரிவிக்கையில், 'எமது தேசத்தின் பிள்ளைகளின் சுகாதார மற்றும் கல்வித்தரங்களை முன்னேற்றும் நோக்கில் நாம் இந்த குடிநீர் வழங்கல் திட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்தோம். இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறும் நோக்கில் 100க்கும் அதிகமான விண்ணப்பங்கள் எமக்கு கிடைத்துள்ள நிலையில், அதிலிருந்து நாம் மிகவும் மோசமான நிலையிலுள்ள பாடசாலைகளை நாம் தெரிவு செய்துள்ளோம். இது ஒரு முழுமையான நீர் வழங்கல் திட்டமாகும். இந்த திட்டம் பின்தங்கிய பிரதேசங்களை சேர்ந்த பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமாக அமையுமென நாம் எதிர்பார்க்கிறோம்' என்றார்.

இந்த திட்டம் குறித்து றிச்சர்ட் பீரிஸ் டிஸ்ரிபியுசன் கம்பனி லிமிடெட்டின் சிரேஷ்ட வர்த்தக அபிவிருத்தி முகாமையாளர் சதாத் மொஹமட் கருத்து தெரிவிக்கையில், 'நீர் பம்பிகள் விற்பனையில் சந்தையின் முன்னோடிகளாக திகழும் நாம், நாட்டு மக்களின் நீர் தொடர்பான தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு எம்மை முழுமையாக அர்ப்பணித்துள்ளோம். இந்த குடிநீர் வழங்கல் திட்டத்தை நாம் எமது நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டமாக முன்னெடுக்க தீர்மானித்தோம். இந்த பாடசாலைகளுக்கு குடிநீர் வழங்கல் திட்டங்களை அன்பளிப்பு செய்வது மட்டுமல்லாமல், இந்த பாடசாலைகளில் நிலவும் இதர குறைகளை நிவர்த்தி செய்வது குறித்தும் நாம் பரிசீலனை செய்யவுள்ளோம்' என்றார்.

வீட்டுப்பாவனை, தொழில்சார் மற்றும் விவசாயத்துறை போன்ற பல்வேறு தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளக்கூடிய வகையில் ஆர்பிடெக் நீர் பம்பிகள் வௌ;வேறு தெரிவுகளில் காணப்படுகின்றன. அத்துடன் இந்த பம்பிகள் அனைத்தும் துருப்பிடிக்காத ஸ்ரீல் கொண்டு தயாரிக்கப்படுகின்றமை விசேட அம்சமாகும். மேலும், இந்த பம்பிகள் தூய இரும்புகளை கொண்டு தயாரிக்கப்படுகின்றமையால், நீர் இறைக்கும் சந்தர்ப்பங்களில் எவ்விதமான சோமானப்பதார்ங்களையும் நீருடன் சேர்க்கமால் 100மூ வீதம் தூய நீர் இறைக்கப்படுவதை உறுதி செய்கிறது. இலங்கையில் விற்பனையாகும் முன்னணி நீர் பம்பி வர்த்தக நாமமான 'ஆர்பிடெக்' மூலம் தயாரிக்கப்படும் நீர் பம்பிகள், இலங்கையின் விவசாயத்துறையில் பயன்படுத்தப்படும் சிறந்த மின் நீர்பம்பியாக தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தரப்படுத்தலை மஹாஇலுக்பல்லம பகுதியில் அமைந்துள்ள விவசாயிகள் பொறியியல் ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

றிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சி நிறுவனம் சுமார் 80 வருடங்களுக்கு அதிகமான உயர் பாரம்பரிய வரலாற்றையும், 35000இற்கும் அதிகமான ஊழியர்களையும் கொண்டுள்ளதுடன், இலங்கையின் மிகப்பெரிய தேசிய குழும வியாபார நிறுவனமாக பல்வேறு துறைகளில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதிகளவு சந்தைவாய்ப்பை தன்னகத்தே கொண்ட பல்வேறு தயாரிப்புகளின் தாயகமாக திகழும் றிச்சர்ட் பீரிஸ் நிறுவனம், இந்நாட்டின் சுப்பர் மார்க்கெட்கள், பெருந்தோட்டத்துறை, பங்குச்சந்தை முகவர் சேவைகள், ரயர், பிளாஸ்ரிக் மற்றும் நிர்மாணத்துறை போன்ற துறைகளிலும் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது. நகர் பகுதிகளை போலவே, கிராமிய மட்டத்திலும், பலராலும் நேசிக்கப்படும் நாமமாக றிச்சர்ட் பீரிஸ் நிறுவனம் திகழ்கிறது. பிரதானமாக ஆர்பிகோ வர்த்தக நாமத்தை விசேடமாக குறிப்பிட முடியும். நாடு பூராகவும் இந்த வர்த்தக நாமத்தை சேர்ந்த தயாரிப்புகள் கிடைக்கின்றமை விசேட அம்சமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .