2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திடமிருந்து எண்ணெய் தாங்கிகளை மீளப்பெற இலங்கை தீர்மானம்

A.P.Mathan   / 2013 மார்ச் 22 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசு, இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் (LIOC) உடன் திருகோணமலை துறைமுக பகுதியில் உபயோகிக்காத நிலையில் காணப்படும் எண்ணெய் தாங்கிகளை மீளப்பெறுவது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.

இது குறித்த அறிவித்தலை அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.

சில தாங்கிகள் மட்டுமே இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் மூலம் உபயோகப்படுத்தப்படுகின்றதாயின், பயன்படுத்தப்படாமல் இருக்கும் எஞ்சிய தாங்கிகளை அரசு மீளப்பெறுவது குறித்து ஏற்கனவே கைச்சாத்திடப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக இரு தரப்புகளுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகளுக்காக இந்த தாங்கிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக தாம் எந்தவிதமான முறையிலும் அறிந்திருக்கவில்லை என லங்கா ஐஓசி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபோத் தக்வாலே தெரிவித்திருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .