2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

கொழும்பு பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்களில் கடந்த இரு மாதங்களில் சிறந்த பெறுபேறுகள் கடந்த வாரம் பதி

A.P.Mathan   / 2013 மார்ச் 24 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


- பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்


(ச.சேகர்)

கொழும்பு பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்களை பொறுத்தமட்டில், கடந்த இரண்டு வாரங்களில் பதிவாகியிருந்த அதிசிறந்த பெறுபேறுகளை கடந்த வாரம் பதிவு செய்திருந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வம் தொடர்ச்சியாக கடந்த வாரமும் பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்களில் ஆதிக்கம் செலுத்தியிருந்தது. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்திருந்த ஜெனீவா பிரேரணை தொடர்பான தீர்மானம் கடந்த வாரம் வெளியாகியிருந்த போதிலும், இந்த முடிவு பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்களில் எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வார கொடுக்கல் வாங்கல்களை பொறுத்தமட்டில் வங்கிகளின் பங்குகள் மீது அதிகளவு ஆர்வம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
 
கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5,768.88 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3312.71 ஆகவும் அமைந்திருந்தன.

மார்ச் 18ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 3,525,687,174 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 23,395 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 22,281 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,114 ஆகவும் பதிவாகியிருந்தன.

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் டேடர்ன்ஸ் (சாதாரண), பைரஹா ஃபார்ம்ஸ், செரண்டிப் என்ஜி. குரூப், அஸ்கொட் ஹோல்டிங்ஸ் மற்றும் லேக் ஹவுஸ் பிரின்டிங் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

சுவதேஷி, சிலோன் லெதர் (உரிமைப்பங்குகள்), கலாமசூ, ஆசிரி சேர்ஜி. மற்றும் எஸ் எம் பி லீசிங் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.



தங்கம் மற்றும் வெள்ளி விலை
கடந்த வாரம் தங்கத்தின் விலை 24 கெரட் பவுணொன்று 52,700.00 ரூபாவை அண்மித்து காணப்பட்டதாக தங்கநகை வட்டாரங்களின் மூலம் அறிய முடிந்தது. 22 கெரட் பவுணொன்று சராசரியாக 48,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. முன்னைய வாரங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த வாரம் தங்கத்தின் பெறுமதி குறிப்பிடத்தக்களவு அதிகரித்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளி 1 கிலோகிராமின் சராசரி விலை 1480.00 ரூபாவை அண்மித்து காணப்பட்டதாக சந்தை அறிக்கைகள் தெரிவித்திருந்தன.

நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 128.54 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 195.58 ஆக காணப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .