2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

விற்பனை குழுவினரின் சிறப்பான செயற்பாடுகளை கௌரவித்தது ஜனசக்தி

A.P.Mathan   / 2013 மார்ச் 26 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


தனது விற்பனை குழுவில் சிறப்பாக செயலாற்றியிருந்த ஊழியர்களை கௌரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கும் நிகழ்வை ஜனசக்தி இன்சூரன்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. 2013ஆம் ஆண்டுக்கான நிறுவனத்தின் வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு 'லாஸ் வெகாஸ்' பாணியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் வெற்றியீட்டியவர்களுக்கு வெளிநாட்டு பயிற்சி சுற்றுலாக்கள், விமானப் பயணச்சீட்டுகள், பணப்பரிசுகள், கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் போன்றன வழங்கப்பட்டிருந்தன. நிறுவனத்தின் நிகழ்வு நாட்காட்டியில் கௌரவமிக்க நிகழ்வாக அமைந்துள்ள இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு, முற்றிலும் விற்பனை அணியினரை பாராட்டி கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் ஜனசக்தி இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரகாஷ் ஷாஃப்ட்டர் கருத்து தெரிவிக்கையில், 'எமது விற்பனை அணியில் முதலீடு செய்வது என்பது நிறுவனத்தினதும், அவர்களினதும் வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அத்துடன், நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அவர்களின் அர்ப்பணிப்பான செயற்பாட்டை போற்றி கௌரவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இந்த வருடாந்த நிகழ்வு எமது நிறுவனத்தை பொறுத்தமட்டில், ஊழியர்களின் நலன் கருதி மேற்கொள்ளப்படும் களியாட்ட நிகழ்வாக அமைந்துள்ளதுடன், மனிதவள அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக 60 மில்லியன் செலவிடப்பட்;டுள்;ளது' என்றார்.

இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் அனைவரினதும் கவனத்தை பெரிதும் ஈர்த்திருந்த நிகழ்வாக, தலைவரின் விருதான வாழ்நாள் சாதனையாளர் விருது எச்.எல்.ஏ.ஹர்ஷன அவர்களிற்கு வழங்கப்பட்டிருந்தது. நீண்ட காலம் ஜனசக்தி இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தமது விற்பனை சேவைகளை வழங்கியிருந்தமைக்காக இந்த விருது வழங்கப்பட்டிருந்தது. லாஸ் வெகாஸ் பாணியில் அமைந்திருந்த இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில், எச்.எல்.ஏ.ஹர்ஷன அதிசயத்தக்க வகையில லிமோசினில் ஊர்தியில் உள்ளே நுழைந்தார். அத்துடன், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு போன்றன அனைவரின் வாழ்விலும் உயர்வான நிலையை அடைய ஏதுவாக அமைந்திருக்கும் என்பதை உறுதி செய்திருந்தார்.

இவ் விருதுகள் வழங்கும் நிகழ்வில் சிறந்த ஆயுள் காப்புறுதி விற்பனையாளர் விருது களுத்துறை கிளையைச் சேர்ந்த கே.கே.விஜேதுங்க விற்கும், சிறந்த தனிப்பிரிவு தலைவர் விருது ஆயுள் காப்புறுதி தலைமையலுவலகத்தை சேர்ந்த எச்.எல்.ஏ.ஹர்ஷனவிற்கும் வழங்கப்பட்டன. ஆயுள் விற்பனை பிரிவில் சிறந்த வாடிக்கையாளர் ஊக்குவிப்பு விருது மஹாவௌ கிளையைச் சேர்ந்த எம்.தங்கையா வுக்கும், ஆயுள் விற்பனை பிரிவின் உயர் பங்களிப்பு விருது ஹட்டன் கிளையைச் சேர்ந்த ஜி.எஸ்.ருவன் குமார விற்கும்; வழங்கப்பட்டன. சிறந்த ஆயுள் வர்த்தக ஊக்குவிப்பு விற்பனை மேற்பார்வையாளருக்கான விருது ஹட்டன் கிளையை சேர்ந்த கே.எம்.எஸ். லக்ஸ்மன் தெஹியத்தகன்டிய விற்கும், ஆண்டுக்கான சிறந்த ஆயுள் வர்த்தக உதவியாளருக்கான விருது ஹட்டன் கிளையை சேர்ந்த எஸ்.அருள்நேசம் ஆகியோருக்கும் வழங்கப்பட்டன. சிறந்த ஆயுள் SNR/வர்த்தக ஊக்குவிப்பு அதிகாரி பட்டத்தை காலியைச் சேர்ந்த ஜி.டபிள்யு.ஏ.தேசப்பிரிய, சிறந்த ஆயுள் A/வர்த்தக ஊக்குவிப்பு முகாமையாளருக்கான விருது அம்பலாங்கொடை கிளையை சேர்ந்த ஜே.என்.டி. டி சில்வா அவர்களிற்கும், சிறந்த ஒட்டுமொத்த ஆயுள் குழுவிற்கான விருது களுத்துறை கிளையை சேர்ந்த கே.டி.கே.பி.பாலசூரியவுக்கும் வழங்கப்பட்டன.

குழுப் பிரிவை பொறுத்தமட்டில், சிறந்த ADO பட்டத்தை கம்பளை ADO நிலையம் வென்றது. பொது காப்புறுதி துறையை பொறுத்தமட்டில், சிறந்த பொது காப்புறுதி ஊக்குவிப்பு விற்பனை மேற்பார்வையாளருக்கான விருது கொழும்பு சிட்டி கிளையை சேர்ந்த என்.எச்.ஆர்.ஆர்.நாக்கந்தன விற்கும், சிறந்த வர்த்தக ஊக்குவிப்பு உதவியாளர் விருது கண்டி கிளையைச் சேர்ந்த கே.விஜேசேகர விற்கும் வழங்கப்பட்டன. சிறந்த வர்த்தக ஊக்குவிப்பு அதிகாரி விருது கொழும்பு அலுவலகத்தைச் சேர்ந்த கே.டி.எஸ்.உதேஷ் இற்கும், சிறந்த SNR/வர்த்தக ஊக்குவிப்பு அதிகாரி விருது கொழும்பு மெட்ரோ அலுவலகத்தைச் சேர்ந்த கே.எச்.டி.ஆரியவங்ச ஆகியோருக்கும் வழங்கப்பட்டன.

மேலும் இந் நிகழ்வில் கொழும்பு மத்திய நிலையத்தைச் சேர்ந்த கே.டி.பியதாஸவிற்கு நட்சத்திர பிரிவு விருது வழங்கப்பட்டது. இந் நிறுவனத்திற்கு அளப்பரிய சேவையாற்றியமைக்காக Hall of Fame விருது எஸ்.ஏ.கே.ஆர்.எஸ்.திலங்க அவர்களிற்கு வழங்கப்பட்டது. ஆயுள் காப்புறுதி பிரிவில், சிறந்த முகாமையாளர் விருது (வெள்ளி) களுத்துறை கிளையைச் சேர்ந்த என்.சி.எஸ்.டி.சில்வா விற்கும், பொது காப்புறுதி பிரிவின் கீழ் கொழும்பு வடக்கு அலுவலகத்தைச் சேர்ந்த வை.ஜி.பி.கே.யட்டவர அவர்களிற்கு சிறந்த விற்பனை முகாமையாளர் விருது வழங்கப்பட்டன. பொது காப்புறுதி பிரிவின் கீழ், சிறந்த பிராந்திய விற்பனை முகாமையாளர் விருது கொழும்பு வடக்கைச் சேர்ந்த எம்.எஸ்.சம்பன் க்கு வழங்கப்பட்டது.

இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில், ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் செஹாரா டி சில்வா கருத்து தெரிவிக்கையில், 'சிறப்பை அடைவதற்கான ஒரே வழி, அதற்காக கடுமையாக உழைப்பதாகும். அர்ப்பணிப்பும் ஆர்வமும் உங்களை வெற்றியை நோக்கி கொண்டு செல்லும். ஜனசக்தி விற்பனை குழுவினரை பொறுத்தமட்டில் இந்த விடயங்கள் வெற்றியின் இரகசியமாக அமைந்துள்ளது' என்றார்.

ஜனசக்தி நிறுவனமானது நிதி ஸ்திரத்தன்மை மற்றும் உரிமை தீர்வுகளை வழங்குவதில் சிறப்பான வரலாற்றினை கொண்டுள்ளது. இலங்கையில் பட்டியலிடப்பட்ட காப்புறுதி நிறுவனங்களிடையே ரூ.12.7 பில்லியன் சொத்துப் பெறுமதி, ரூ.7 பில்லியன் வருடாந்த GWP தொகையுடன் ரூ.1.49 பில்லியன் பெறுமதியான உயர் மூலதனத்தை கொண்ட நிறுவனமாக ஜனசக்தி திகழ்கிறது. ஜனசக்தி நிறுவனத்தின் மூலம் காப்புறுதி ஒப்பந்ததாரருக்கு 20 பில்லியன்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், உலகளாவிய A தர மீள் காப்புறுதியாளர்களின் ஆதரவினையும் பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .