2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

மலேசிய மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர் இலங்கையில் முதலிட ஆர்வம்

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 02 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேசியாவின் மோட்டார் சைக்கிள் உற்பத்தி செய்யும் நிறுவனமான Asiatic Holdings Sdn Bhd, இலங்கையில் தனது இரண்டாவது உற்பத்தி மையத்தை நிறுவ ஆர்வம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நிலவும் அதிகளவு சந்தை வாய்ப்பு மற்றும் தமது நிறுவனத்தின் விஸ்தரிப்பு நடவடிக்கைகளுக்கமைவாக இந்த ஆர்வத்தை வெளியிட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் தயாரிப்புகளின் விற்பனையில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிறுவனம், இவ்வருடம் இலங்கையில் 15,000 – 20,000 வரையான மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

மலேசியா – சீனா இணை நிறுவனமாக திகழும் இந்நிறுவனம், கடந்த ஆண்டில் அண்ணளவாக 2,000 மோட்டார் சைக்கிள்களை இலங்கையில் விற்பனை செய்திருந்தது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் தனது பிரசன்னத்தை இந்நிறுவனம் மேற்கொண்டிருந்தது.

இந்நிறுவனத்தின் பணிப்பாளரான ஹு யிங் கருத்து தெரிவிக்கையில், ”இலங்கையர்கள் எரிபொருள் சிக்கனம் குறித்து அதிகளவு அக்கறை செலுத்துகின்றனர். ஏனெனில் நாட்டில் எரிபொருள் செலவு அதிகமாக காணப்படுகிறது. 2012ஆம் ஆண்டில் சுமார் 300,000 மோட்டார் சைக்கிள்கள் விற்பனையாகியிருந்தன. இது கடந்த 2009ஆம் ஆண்டில் விற்பனையான 135,000 உடன் ஒப்பிடுகையில் கணிசமான அளவு அதிகரிப்பாகும்” என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .