2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சைபர் தாக்குதல்: அபாய நிலையில் பங்குச்சந்தைகள்

A.P.Mathan   / 2013 ஜூலை 19 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஆண்டில் உலகின் பெரும்பாலான பங்குப்பரிவர்த்தனை நிலையங்களின் செயற்பாடுகளை சைபர் தாக்குதல்களுக்கு உட்படுத்த இலக்கு வைக்கப்பட்டிருந்ததாக 46 பங்குப்பரிவர்த்தனைகள் மீது மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்விலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.
 
இந்த தாக்குதல்களின் மூலம் பங்குப்பரிவர்த்தனையின் செயற்பாடுகளை நிலைகுலையச் செய்வதுடன், மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்துவதும் இந்த இலக்கு வைத்தவர்களின் நோக்கமாக அமைந்திருந்தது. 
 
பெரும்பாலான நிதிக் கொடுக்கல் வாங்கல்கள், பரிவர்த்தனை நடவடிக்கைகள் போன்றன கணினி மயப்படுப்பட்ட கட்டமைப்பிலேயே பெருமளவு தங்கியுள்ளன. இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பங்குப்பரிவர்த்தனை நிலையங்களில் 53 வீதமான நிலையங்கள் தாம் கடந்த ஆண்டு சைபர் தாக்குதல்களுக்கு இலக்காகியிருந்தமையை உறுதி செய்திருந்தன. பொதுவான தாக்குதல்களாக சேவை வழங்குதல்களை இடைநிறுத்தல், வலைப்பின்னல்கள் மற்றும் இணையத்தளங்களை வைரஸ்களை செலுத்தி செயலிழக்கச் செய்தல் போன்றன அமைந்திருந்தன.
 
மேலும், மடிக்கணினிகள் திருட்டு, இணையத்தளங்களை வேவுபார்த்தல், தரவுகள் திருட்டு மற்றும் உள்ளக விபரங்கள் திருட்டு போன்றனவும் இடம்பெற்றிருந்ததாகவும், எவ்விதமான நிதி திருட்டுகளும் இடம்பெறவில்லை என ஆய்வில் பங்கேற்ற பங்குப்பரிவர்த்தனைகள் தெரிவித்திருந்தன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .