.jpg)
தலவத்துகொட வைத்தியசாலையில் முதல் குழந்தை பிரசவம் அண்மையில் இடம்பெற்றிருந்தது. பிரபோதயா மற்றும் தாரக அபேசிங்க ஆகியோருக்கு பெண் குழந்தை ஒன்று அண்மையில் தலவத்துகொட வைத்தியசாலையில் பிறந்திருந்தது. சிசேரியன் அறுவை சிகிச்சை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் குழந்தை பெறு வைத்திய ஆலொசகரும், தலவத்துகொட ஹேமாஸ் வைத்தியசாலையின் வருகை தரும் ஆலோசகருமான வைத்தியர் தம்மிக சில்வா மூலம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. பிறக்கும் போது குழந்தையின் நிறை 3.2 கிலோகிராம்களாக அமைந்திருந்தது.
வைத்தியசாலையின் பொது முகாமையாளர் வைத்தியர் சமிளா ஆரியானந்த, பிறந்த குழந்தைக்கு அன்பளிப்பு ஒன்றையும் வழங்கியிருந்தார். வைத்தியசாலையின் 'மாத்துரு' திட்டத்துக்கு அமைய குழந்தை அபேசிங்க பிறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் மூலம் குழந்தை பேறுக்காக நிலையான கட்டணம் அறவிடப்படுவதுடன், குழந்தை பேறு இயற்கையானதாக அல்லது சிசேரியன் அறுவை சிகிச்சை முறையில் அமைந்திருந்தாலும் கூட வைத்தியசாலை கட்டணம் போன்ற சகல கட்டணங்களும் உள்ளடக்கப்பட்டு, நோயாளருக்கு முற்கூட்டியே இந்த கட்டண விபரம் தெரியப்படுத்தப்படும். மேலும் நோய்த்தடுப்பு வழங்கல்களுக்கும், மருத்துவ பரிசோதனைகளுக்கும் இந்த திட்டத்தின் கீழ் குழந்தைக்கு 10 வயது வரும் வரை விலைக்கழிவு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் தாய்மாருக்கு குழந்தை பராமரிப்பு குறித்த வகுப்புகள் போன்ற மேலும் பல அனுகூலங்களும் இந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த முதலாவது குழந்தை பிறப்பு குறித்து வைத்தியசாலையின் பொது முகாமையாளர் வைத்தியர் சமிளா ஆரியானந்த கருத்து தெரிவிக்கையில், 'எமது வைத்தியசாலையின் முதலாவது குழந்தை பிறப்பு எமக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹேமாஸ் வைத்தியசாலையில் தலைசிறந்த மகப்பேறு வசதிகள் காணப்படுகின்றன. குழந்தை பேறுகள் வைத்திய நிபுணர்களின் ஆலோசனைக்கமைவாக இடம்பெறுகின்றன' என்றார்.
ஹேமாஸ் தலவத்துகொட வைத்தியசாலையை சேர்ந்த மகப்பேற்று பிரிவு வசதிகளில் இரண்டு நவீன வசதிகள் படைத்த அறுவை சிகிச்சை பிரிவுகள், இரண்டு குழந்தை பேறு அறைகள் போன்றன முற்றிலும் பிரத்தியேகமான முறையில் அமைந்துள்ளன. அத்துடன் சகல வசதிகளும் படைத்த குழந்தைபேறு தீவிர சிகிச்சை பிரிவு (Nஐஊரு) இதில் உள்ளடங்கியுள்ளது. தாதியர்கள் முறையாக பயிற்றுவிக்கப்பட்டுள்ளதுடன், அறுவை சிகிச்சை பிரிவு பகுதியில் எவ்வாறான முறையில் செயற்பட வேண்டும் போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.
வத்தளை, காலி மற்றும் தற்போது தலவத்துகொடயில் இயங்கி வரும் ஹேமாஸ் வைத்தியசாலையானது இந்த சர்வதேச சுகாதார தரத்துக்கான அவுஸ்திரேலிய சம்மேளனத்தின் சான்றை பெற்ற இலங்கையின் முதலாவது வைத்தியசாலை தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹேமாஸ் தலவத்துகொட வைத்தியசாலை 60 படுக்கைகளை கொண்டமைந்துள்ளதுடன், உயர் தொழில்நுட்ப வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. வருடமொன்றுக்கு சுமார் 150,000 நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கக்கூடிய திறன் வாய்ந்ததாக அமைந்திருக்கும். வைத்தியசாலை தாதியர்களுக்கு பயிற்சி வழங்கவென தனது சுய பயிற்சி நிலையத்தை கொண்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன், முற்றிலும் புதிய அனுபவத்துடன் சிறந்த நோயாளர் பராமரிப்பு சேவைகளை வழங்க தன்னை தயார்ப்படுத்தியுள்ளது.
ஹேமாஸ் வைத்தியசாலை, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமாக திகழ்கிறது. ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் குழுமம் நாட்டில் பிரதானமாக ஐந்து துறைகளில் தமது கவனத்தை செலுத்தி வருகிறது. வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள், சுகாதாரம், போக்குவரத்து, ஓய்வு, மின்உற்பத்தி ஆகியன அந்த துறைகளாகும்.