.jpg)
ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் நாட்டின் இறக்குமதி செலவீனம் 9.4வீதத்தால் வீழ்ச்சியடைந்து 7581 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்ததுடன், ஏற்றுமதி வருமானம் 6.6 வீதத்தால் வீழ்ச்சியடைந்து 3854 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியிருந்ததாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மே மாதத்தில் குறிப்பாக இறக்குமதி பொருட்களான எரிபொருள், ஆடை மற்றும் ஆடை உற்பத்திகள், போக்குவரத்து சாதனங்கள், இரும்புகள், பசளை வகைகள், வாகனங்கள் மற்றும் உலர் உணவு பொருட்கள் போன்றவற்றின் மீதான செலீனம் வீழ்ச்சியடைந்திருந்தது. கோதுமை, தங்கம் மற்றும் நிர்மாண பொருட்கள் போன்றனவற்றின் மீதான செலவீனம் அதிகரித்து காணப்பட்டது.
நடப்பு ஆண்டின் மே மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி கடந்து ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 44.4 வீதம் அதிகரித்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தேயிலை ஏற்றுமதியின் அளவு குறைவாக காணப்பட்டமையின் காரணமாக, தேயிலை மூலமான ஏற்றுமதி வருமானம் மே மாதத்தில் குறைவாக பதிவாகியிருந்ததுடன், ஆடை உற்பத்திகள் 2 வீத அதிகரிப்பையும் மே மாதத்தில் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.