2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் தலைமை அதிகாரி விரைவில் ஓய்வு

A.P.Mathan   / 2013 ஜூலை 29 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் தலைமை அதிகாரியாக பணியாற்றிவரும் அனூப் சிங் தமது பதவியிலிருந்து வெகுவிரைவில் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இவர் ஒரு காலகட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதியாக பணியாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 1973ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து கொண்ட அனூப் சிங், மேற்கு ஹெமிஸ்பியர் திணைக்களத்தின் தலைவராக பணியாற்றியிருந்ததுடன், பின்னர் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் தலைவராக மாற்றப்பட்டிருந்தார். இந்திய றிசர்வ் வங்கியின் ஆலோசகராக பணியாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இவரின் ஓய்வு குறித்த அறிவித்தலை தொடர்ந்து புதிதாக நியமிக்கப்படவுள்ள தலைமை அதிகாரி குறித்த விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .