.jpg)
உத்தரவாதங்களைக் கொண்டதும் நிலையான வருமானத்தினைப் பெற்றுத்தரக்கூடியதுமான அரச மற்றும் கம்பனிகளின் கடன் பிணையங்களில் முதலீடு செய்வதற்குத் தேவையான முக்கியமான விடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் அமைந்த கருத்தரங்கொன்றை கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் யாழ். கிளை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த கருத்தரங்கு இம்மாதம் 10ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணி முதல், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கொழும்பு பங்குபரிவர்த்தனையின் கிளை காரியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த கருத்தரங்கில் கடன்பிணையங்களின் வகைப்படுத்தல்கள், கடன் பிணையங்கள் கொண்டுள்ள விஷேட சிறப்பியல்புகள், கடன் பிணையங்களுடன் தொடர்புடைய மிகமுக்கிய நுட்பங்கள் மற்றும் எண்ணக்கருங்கள், கடன் பிணையங்களுடன் தொடர்பான இடர்கள் அல்லது தாக்கத்தினை எற்படுத்தவல்ல காரணிகளும் அவற்றைக் குறைப்பதற்கான வழிவகைகளும், கடன் பிணைகளுக்கான 1ஆம் மற்றும் 2ஆம் தரச்சந்தைகள், பிணையங்களின் விலையிடல் பொறிமுறைகள் மற்றும் கணிப்பீட்டு நுட்பங்கள், கடன் தரப்படுத்தல் நிறுவனங்கள் போன்ற விடயங்கள் குறித்து கலந்தாரயப்படவுள்ளன.
இந்த கருத்தரங்கின் வளவாளராக இலங்கை நம்பிக்கை அலகுகள் நிதியத்தின் தலைவர் பி.அசோகன் அவர்கள் பங்குபற்றவுள்ளதுடன், இந்த கருத்தரங்கு முற்றிலும் இலவசமாக அமைந்துள்ளது.
மேலதிக விபரங்களை கொழும்பு பங்குபரிவர்த்தனையின் யாழ். கிளையுடன் 021–2221455 அல்லது 0777 822014 எனும் தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.