2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பொன்டெரா குழந்தை பால்மா வகைகளை விளம்பரப்படுத்தவும் தடை

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 08 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியுசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளுக்கான ஊடக விளம்பரங்களை உடனடியாக இடைநிறுத்துமாறும், கடைகளில் இந்த வகை தயாரிப்புகளை விற்பனையை நிறுத்துமாறும் இலங்கை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
 
நியுசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளில் DCD எனப்படும் ஒரு வகை இரசாயன பதார்த்தம் கலந்திருப்பது கண்டறியப்பட்டமை குறித்து சுகாதார அமைச்சின் அதிகாரிகளின் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையை நியுசிலாந்தில் பாலுற்பத்தி நிறுவனங்களும் ஏற்றுக் கொண்டிருந்தன. 
 
இதே வேளை, இந்த சர்வதேச அறிக்கைகளில் வெளியாகிய வண்ணம் இருந்த நிலையில், உள்நாட்டு பல் விநியோக நிறுவனங்கள் தமது தயாரிப்புகள் 100 வீதம் பாதுகாப்பானவை என ஊடகங்களில் விளம்பரங்களை பிரசுரித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
நியுசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பால் மா வகைகளையும் தடை செய்யுமாறும், விற்பனை நிலையங்களிலிருந்து உடனடியாக இவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சுகாதார அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணித்துள்ளது.

  Comments - 0

  • prashath Saturday, 10 August 2013 04:55 PM

    மேலதிக தகவல் தேவை...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .