2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சிக்கு தங்கம், வெள்ளி விருதுகள்

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 08 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் நிதிச்சேவைகளை வழங்கும் மக்கள் நம்பிக்கையை வென்ற நிறுவனமான பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி நிறுவனத்துக்கு அண்மையில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற 13ஆவது SLIM-NASCO 2013 விருதுகள் வழங்கலின் போது இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி விருது என்பன கிடைத்திருந்தன.
 
2013ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வில், சிறந்த பிராந்திய செயற்பாடுகளுக்கான தங்க விருதுகளை பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் கிராண்ட்பாஸ் கிளையைச் சேர்ந்த காஞ்சன வாரியபொல மற்றும் ஆண்டின் சிறந்த முன்நிலையாளருக்கான தங்க விருதினை தெஹிவளை கிளையின் சிரேஷ்ட சந்தைப்படுத்தல் உதவியாளர் அயோத்திய கலப்பத்தி ஆகியோர் வென்றிருந்தனர். பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் மினுவங்கொட கிளையின் சிரேஷ்ட சந்தைப்படுத்தல் உதவியாளர் துஷார யாலகே சிறந்த முன்நிலையாளருக்கான வெள்ளி விருதினை வெற்றி பெற்றார். 
 
இலங்கையின் சந்தைப்படுத்தல் துறையில் சிறப்பான முறையில் தமது பங்களிப்புகளை வழங்கி வரும் நிபுணர்களின் திறமைகளை கௌரவிக்கும் வகையில் வருடாந்தம் SLIM-NASCO விருதுகள் எற்பாடு செய்யப்படுகிறது. 
 
இந்த விருதுகளை வெற்றி பெற்றமை தொடர்பாக பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் உதவி பொது முகாமையாளர் லயனல் பெர்னான்டோ தமது கருத்துக்களை வெளியிடுகையில், 'இலங்கையின் வங்கித்துறை சாரா நிதிச்சேவைகளை வழங்குவதில் சந்தை முன்னோடியாக திகழும் பீபிள்ஸ் லீசிங், வாடிக்கையாளர்களின் வியாபார மற்றும் பிரத்தியேக நிதித் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான உயர்தர சேவைகளை வழங்குவதையே பிரதான கொள்கையாக கொண்டுள்ளது. எமது நிர்வாக குழுவினரும், ஊழியர்களும் இந்த தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றனர். இந்த அர்ப்பணிப்பான செயற்பாட்டுக்கு கிடைத்த சிறந்த கௌரவிப்பாக இந்த தங்கம் மற்றும் வெள்ளி விருதுகள் அமைந்துள்ளன. எமது வெற்றி பெற்ற குழுவினருக்கு நிறுவனத்தின் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
 
பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி மூலம் வழங்கப்படும் விசேடத்துவம் வாய்ந்த நிதிச் சேவைகளில் லீசிங், வாடகை கொள்வனவு, நிலையான வைப்புகள், சேமிப்பு கணக்குகள், கடன் வசதிகள், ஃபொரெக்ஸ்(குழசநஒ) , நுண்நிதிச் சேவைகள் மற்றும் இஸ்லாமிய நிதிச்சேவைகள் போன்றன உள்ளடங்குகின்றன. 
 
பீப்பள்ஸ் இன்சூரன்ஸ் கம்பனி, பீப்பள்ஸ் மைக்ரோ பினான்ஸ் கம்பனி, பீப்பள்ஸ் லீசிங் புரொப்பர்டி டிவலப்மன்ட் கம்பனி மற்றும் பீப்பள்ஸ் லீசிங் ஃபிளீட் மனேஜ்மன்ட் கம்பனி ஆகியன பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சியின் அங்கத்துவ நிறுவனமாக செயற்படுகின்றன. 
 
கம்பனியின் சிறப்பியல்பானது, வாடிக்கையாளரின் சகல நிதி தேவைகளுக்கும் தீர்வான நிதிச் சேவைகளை ஒரே கூரையின் கீழ் குறைந்த செலவில் விரைவாக வழங்குகின்றமை ஆகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .