2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 'நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ்' புதிய விற்பனை நிலையம்

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 10 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முதற்தர மூலிகை உற்பத்தி நிறுவனமான 'நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ்' புதிய விற்பனை நிலையம் ஓகஸ்ட் 1ஆம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வெளிச் செல்லும் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. 
 
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற வைபவத்திற்கு அமைச்சர்கள், அரச அதிகாரிகள், விமான நிலையம் மற்றும் விமானசேவை இலங்கை நிறுவனத்தின் தலைவர் பிரசன்ன விக்கிரமசூரிய, நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான சமந்த குமாரசிங்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 
நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ் உற்பத்திகளை இலங்கையின் வர்த்தக குறியீடாக 2020ஆம் ஆண்டு சர்வதேச மட்டத்துக்கு கொண்டு செல்வதை இலக்காக வைத்தே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. விமான நிலைய வெளிச் செல்லும் பகுதியில் அமைந்துள்ள 'நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ்' விற்பனை நிலையம் ஊடாக இலங்கைக்கு வருகை தந்துவிட்டு மீண்டும் செல்லும் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்தே இந்த ஊக்குவிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.  
 
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விற்பனை நிலையமொன்றை அமைக்க பல ஆண்டுகளாக  முயற்சிகளை மேற்கொண்டதாகவும் மஹிந்த சிந்தனை மூலம் அது யதார்த்தமானதாக நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான சமந்த குமாரசிங்க குறிப்பிட்டார். உள்ளுர் வர்த்தகர்களை ஊக்குவிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அதனாலேயே விமான நிலையத்தில் நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ் விற்பனை நிலையமொன்றை ஆரம்பிக்க கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
 
நூற்றுக்கு மேற்பட்ட உற்பத்திகளை கொண்டுள்ள நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ் உற்பத்திகள் மத்தியில் ப்ளெட்டினம் (Platinum மற்றும் ஹர்பல் ஹெரிட்டேச் (Herbal Heritage) உற்பத்திகள் வெளிநாட்டு சந்தையை இலக்கு வைத்து தயாரிக்கப்பட்டுள்ளன. நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ் வர்த்தக பெயர் 50 நாடுகளில் அறிவுசார் ஆவணங்கள் தன்னகத்தே கொண்டுள்ளதுடன் அவற்றில் 20 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்கின்றது. 
 
ஐரோப்பாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட GMP மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ISO தரச்சான்றிதழின் கீழ் நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் உற்பத்திகளை மேற்கொள்கின்றது. புதிய தொழில்நுட்பத்துடன் அமைந்த கைத்தொழிற்சாலையில் தமது உற்பத்திகளை முன்னெடுக்கின்ற நிறுவனம் தொழிற்சாலையை சூழ 500 இற்கும் அதிகமான விசேடமான இயற்கை மூலிகைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. 
 
தமது ஆராய்ச்சிகளுக்காக ஆய்வு நிலையமொன்றை அமைத்த ஒரே ஒரு தனியார் நிறுவனமாகவும் நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன் விளங்குகின்றது. மிகவும் பழமைவாய்ந்த மூலிகைகளை பாதுகாக்கும் நோக்கில் நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .