2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் சிறந்த மருந்து விநியோகித்தராக சைடஸ் கெடிலா

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 14 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தால் (State  Pharmaceuticals  Corporation) வழங்கப்படும் வருடத்தின் சிறந்த மருந்து வழங்குனருக்கான விருதை இந்தியாவின் முன்னிலை மருந்து தயாரிப்பு நிறுவனமான சைடஸ் கெடிலா (ZCL) வென்றெடுத்துள்ளது.
 
2012ஆம் ஆண்டுக்கான விருதை சைடஸ் கெடிலா (ZCL) நிறுவனம் வென்றெடுத்துள்ளதுடன் குறித்த நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகளாக சன்ஷைன் குழுமத்தின் (Sunshine Holdings) கிளை நிறுவனமான சுவிஸ் பயோஜீனிக்ஸ் LTD (SBL) செயற்பட்டு வருகின்றது. 
 
60 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் ஓளடதப் பொருள் உற்பத்தியை மேற்கொண்டு வருகின்ற சைடஸ் கெடிலா (ZCL) நிறுவனம் அந்நாட்டின் நான்காவது மிகப் பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமாக விளங்குகின்றது. 1985 ஆம் ஆண்டு முதல் சுவிஸ் பயோஜீனிக்ஸ் LTD (SBL) நிறுவனம் சைடஸ் கெடிலா (ZCL) நிறுவனத்தின் தயாரிப்புக்களை இலங்கையில் விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  
 
தமது வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த சைடஸ் கெடிலா (ZCL) நிறுவனத்தின் சர்வதேச வர்த்தகத்துக்கான தலைவர் அசோக் பாட்டியா, தமது நிறுவனத்தின் 40 சதவீதமான வருமானம் இந்தியாவிலிருந்தே கிடைக்கின்றது என்றும், ஏனைய 60 சதவீதமான வருமானம் சர்வதேச சந்தைகளிலிருந்து கிடைக்கின்றது என்றும் தெரிவித்தார்.அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், பிரேஸில், மெக்ஸிக்கோ, இலங்கை உள்ளிட்ட சந்தைகளில் தங்களது நிறுவனம் செயல்படுகிறதெனவும் தெரிவித்தார். இலங்கையில் தமது மருந்து தயாரிப்புக்களை விநியோகிக்க சுவிஸ் பயோஜீனிக்ஸ் நிறுவனம் (SBL) கைகோர்த்து செயற்படுகின்றமை தமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது எனவும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .