
யமஹா YZ 125சிசி நிகழ்வான வருடாந்த புரnநெச சுப்பர்குரொஸ் மோட்டார்சைக்கிள் பந்தய நிகழ்வுக்கு மொபில் லுப்ரிகன்ட்ஸ் அனுசரணை வழங்கியிருந்தது. தொடர்ச்சியான எட்டாவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போட்டி, ஆர்ட்லரி பிரிவின் மூலம் மின்னேரியாவில் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டிருந்தது. இம்முறை போட்டிகளின் விசேட அம்சமாக யமஹா YZ 125சிசி நிகழ்வில், இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் வீரர்களுக்கென புதிய 10 விசேட மோட்டார் சைக்கிள்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன. இந்த போட்டிகளுக்கு 'Mobil Racing 2T Oil' மூலம் தனது அனுசரணையை மொபில் லுப்ரிகன்ட்ஸ் வெளிப்படுத்தியிருந்தது.
இலங்கையில் மோட்டார் விளையாட்டை ஊக்குவித்து, பிரபல்யப்படுத்தும் வகையில் இலங்கையில் மொபில் வர்த்தக நாமத்தில் அமைந்த வாகன என்ஜின் ஒயில் வகைகளை விநியோகிக்கும் மெக்லாரன்ஸ் லுப்ரிகன்ட்ஸ் லிமிடெட், இந்த நிகழ்வுக்கும் அனுசரணை வழங்கியிருந்ததுடன், இந்த நிகழ்வுக்கு அதிகளவு பார்வையாளர்களின் ஆதரவும் கிடைத்திருந்தது.
MOBIL RACING 2T என்பது உயர் வினைத்திறன் வாய்ந்த, முழுமையான கூட்டிணைப்பாலான, ஈரடிப்பென்ஞ்சின் ஒயில் வகையாகும். இது இன்றைய காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மோட்டார்சைக்கிள்களின் செயற்திறனை அதிகரிக்கும் வகையில் அல்லது செயற்திறனுக்கான தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
ExxonMobil என்பது உலகில் அதிகளவு ஒயில் வகைகளை விற்பனைசெய்யும் சர்வதேச ஒயில் மற்றும் காஸ் கம்பனியாகும். பெற்றோலிய பொருட்களை பதப்படுத்தி சந்தைப்படுத்தி வரும் நிறுவனமாகவும் திகழ்கிறது.
மெக்லரன்ஸ் லுப்ரிகன்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர் தினேஷ் ஜயவர்தன கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையில் மோட்டார் விளையாட்டின் மீதான ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், யமஹா YZ 125சிசி நிகழ்வுக்கு அனுசரணை வழங்க வாய்ப்பு கிடைத்தமையையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்' என்றார்.
100 ஆண்டுகளுக்கு அதிகமான தலைமைத்துவ வரலாற்றைக் கொண்ட இந்நிறுவனம் தனது வர்த்தக கொள்கைகளை செயற்படுத்துவதற்காக கொண்டுள்ள அர்ப்பணிப்பு மற்றும் ஆழ்ந்த ஆய்வுகள், உலகளாவிய ரீதியில் அதிகரித்துச் செல்லும் கேள்விகளை நிவர்த்தி செய்வதற்காக அமைனந்த கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பம் போன்றன நிறுவனத்தை உயர்ந்த அடிப்படை தரங்கள் மற்றும் நிலையான அனுகூலங்களை பின்பற்றுவதற்கு ஏதுவாக அமைந்திருந்தன.