
மருத்துவ சேவையில் 32 வருட கால அனுபவத்தைக் கொண்ட தொதர்ன் சென்ரல் வைத்தியசாலை வட மாகாண மக்களின் நலன் கருதி முதல் முறையாக ஜனசக்தி காப்புறுதியுடன் இணைந்து குடும்பக் காப்புறுதி திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
நொதர்ன் சென்ரல் வைத்தியசாலை ஜனசக்தி காப்புறுதியுடன் இணைந்து நடைமுறைப்படுத்தியுள்ள இந்த திட்டமானது இலங்கையில் எந்தவொரு வைத்தியசாலையிலும் இதுவரையில் வழங்கப்படாத ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இந்த திட்டத்தின் பிரகாரம் குடும்ப காப்புறுதி திட்டமானது Scheme A, Scheme B என இரு தெரிவுகளை கொண்டுள்ளது. Scheme A க்கான வருடாந்த கட்டுப்பணம் ரூ10,763.54 (தனிநபருக்குரியது, வரிப்பணம் உள்ளடக்கியது) ஆகும். குடும்பத்துக்கான கட்டணம் ரூ.11,806.65 ஆகும் (வரிப்பணம் உள்ளடங்கலாக) இதற்கான காப்புறுதி தொகை ரூ.80,000 + 5,000(OPD) ஆகும்.
Scheme B திட்டத்துக்கான தனிநபர் வருடாந்த கட்டுப்பணம் வரிப்பணம் உள்ளடங்கலாக ரூ12,952.92 ஆகும். குடும்பத்தாருக்கு ரூ. 14,645.68 ஆகும். இதற்கான காப்புறுதி தொகை ரூ.100,000 + 5,000(OPD) ஆகும். இவை நிபந்தனைகளுக்கு உட்பட்டவையாகும்.
60 வயதுக்குட்பட்ட தாய், தந்தை மற்றும் 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் இக்காப்புறுதியைப் பெற தகுதியுடையோராவர். இக்காப்புறுதிக்கான கட்டுப்பணத்தை தனியார் வங்கிக் கடன் அட்டையைப் பயன்படுத்தி இலகுவாகச் செலுத்துவோருக்கு நொதேர்ன் சென்ரல் வைத்தியசாலையால் வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
இந்த காப்புறுதிக்கிணங்க வெளிநோயாளர் பிரிவு (OPD) ரூபா. 5000 வரை வழங்கப்படும். வைத்திய ஆலோசனை, மருந்துக் கட்டணம், எக்ஸ்ரே ஆய்வுகூடப்பரிசோதனைகள், என்பன இதில் உள்ளடங்குகின்றன. சாதாரண மகப்பேற்றுக்கு ரூ. 50,000 வழங்கப்படும். சத்திர சிகிச்சை மகப்பேற்றுக்கு வைத்தியசாலை கட்டணத்தில் 75 வீதம் வழங்கப்படும். (நிபந்தனைகளுக்கு உட்படும்)
அத்துடன் சகல விதமான சத்திர சிகிச்சைகளுக்கும் அதாவது பொது சத்திரசிகிச்சை, கண் சத்திரசிகிச்சை காது, மூக்கு, தொண்டை (லாப்ரோஸ்கொபி) சிறு நீரக தொகுதி (யூரோலொஜி) போன்றவற்றுக்கும் காப்புறுதி வழங்கப்படும்.
மேலும் நொதர்ன் சென்ரல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு இந்த காப்புறுதி மூலம் கட்டணங்களில் 15 வீத கழிவு வழங்கப்படும்.
காப்புறுதியில் இணைந்து இரண்டு மாதங்களின் பின்னரே இந்தசலுகைகளை பெற முடியும். மகப்பேற்றுக்கான சலுகைகளை காப்புறுதியில் இணைந்து 10 மாதங்களின் பின்னர் பெறலாம்.
மேலதிக விபரங்களுக்கு நொதர்ன் சென்ரல் வைத்தியசாலையுடன் 021 – 2219988, 021-2219977, 021-2222263 ஆகிய தொலைபேசி .இலக்கங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலமாகவும், ஜனசக்தி நிறுவனத்தின் தர்ஷன் 0777 789266 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டும் பெற்றுக் கொள்ளலாம்.