2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

டாடா பயணிகள் வாகனங்களுக்கு மொபில் எண்ணெய் வகைகள்

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 03 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


மொபில் லுப்ரிகன்ட்ஸ் வகைகளை இலங்கையில் விநியோகிக்கும் மெக்லாரன்ஸ் லுப்ரிகன்ட்ஸ் நிறுவனம், வாகன துறையில் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது. இலங்கையில் அனைத்து டாடா ரக பயணிகள் வாகனங்களுக்கும் பரிந்துரைக்கப்படும் லுப்ரிகன்ட் பங்காளராக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. DIMO நிறுவனத்தின் மூலம் இறக்குமதி செய்யப்படும் உலகப்புகழ்பெற்ற வாகனங்களான மேர்சடீஸ் பென்ஸ், கிரைஸ்லர் மற்றும் ஜீப் போன்றவற்றுக்கு 15 ஆண்டுகளுக்கு மேலாக அதிகளவு பரிந்துரைக்கப்படும் லுப்ரிகன்ட் பங்காளராக மொபில் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 
இந்த உடன்படிக்கை குறித்து மேர்சடீஸ் பென்ஸ்-டாடா விற்பனைகளுக்கான தலைமை அதிகாரி ரஜீவ் பண்டிதகே கருத்து தெரிவிக்கையில், 'உலகின் தலைசிறந்த பொறியியல் நயத்தில் அமைந்த வர்த்தக நாமங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் DIMO பெருமையடைகிறது. இந்த உடன்படிக்கையில் மூலம் டாடா பயணிகள் வாகனங்களின் வினைத்திறன் மற்றும் செயற்பாடுகள் மேலும் உறுதியடையும் என நாம் நம்புகிறோம். உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்ற வர்த்தக நாமமான மொபில் உடன் கைகோர்ப்பதையிட்டு நாம் பெருமையடைகிறோம்' என்றார். 
 
மேக்லாரன்ஸ் லுப்ரிகன்ட்ஸ் நிறுவனத்தின் பொது முகாமையாளர் டிலான் செனவிரட்ன கருத்து தெரிவிக்கையில், 'கடந்த பல ஆண்டுகளாக DIMO நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த புதிய பங்காண்மையின் மூலம் எமது செயற்பாடுகள் மேலும் வலுவடையும் என்பதுடன், எமது வர்த்தக உறவுகள் மேலும் உறுதியடையும் என எதிர்பார்க்கிறோம்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .