2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நொகியா தனது வர்த்தகத்தை மைக்குரொசொஃப்ட் நிறுவனத்துக்கு விற்க தீர்மானம்

Kogilavani   / 2013 செப்டெம்பர் 04 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

5.44 பில்லியன் யூரோக்களுக்கு (7.17 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) தனது கையடக்க தொலைபேசி வர்த்தக நடவடிக்கைகளை மைக்குரொசொஃப்ட் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, தனது கையடக்க தொலைபேசி மாதிரிகளுக்கான உரிமையை மைக்குரோசொஃப்ட் நிறுவனத்துக்கு 10 ஆண்டுகளுக்கு கையளிப்பதாகவும், வலையமைப்பு கட்டமைப்பு மற்றும் சேவைகள் துறையில் அதிகளவு கவனத்தை செலுத்த தாம் தீர்மானித்துள்ளதாகவும், தற்போது காணப்படும் சூழலில் நிறுவனத்துக்கும், அதன் பங்குதாரர்களுக்கும் இது சிறந்த தீர்வாக அமைந்திருக்கும் என தாம் கருதுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 2014 ஏப்ரல் மாதமளவில் இந்த நிறுவன கைமாற்றம் முற்றாக பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நொகியா நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 32,000 ஊழியர்கள் மைக்குரோசொஃப்ட் நிறுவனத்துக்கு மாற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .