2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இலங்கையில் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த பால் பண்ணை ஒன்றை நிறுவ டச் நிறுவனம் ஆர்வம்

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 06 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர் தொழில்நுட்பம் வாய்ந்த, செழிப்பான பசுக்களைக் கொண்ட பால் பண்ணை ஒன்றை இலங்கையில் நிறுவுவதற்கு தாம் ஆர்வமாக உள்ளதாக நெதர்லாந்தைச் சேர்ந்த வெலேமா ஹோல்டிங்ஸ் தெரிவித்துள்ளது. 
 
1500 ஹெக்டெயர் பரப்பளவில் பசுமையான நீர் வசதிகளுடன் உகந்த ஒரு பகுதியில் இந்த பண்ணையை நிறுவ தாம் தீர்மானித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்திருந்தது. இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நெதர்லாந்தின் வர்த்தக தூதுக்குழுவில் ஒரு அங்கமாக இடம்பெற்றிருந்த வெலேமா ஹோல்டிங்ஸ் தமது ஆர்வத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .