.jpg)
இலங்கையின் முதற்தர மூலிகை உற்பத்தி வர்த்தக நாமமான 'நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ்' உற்பத்திகளை தயாரிக்கும் நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் வர்த்தக நடவடிக்கைகளுக்கு அப்பால் பல்வேறு சமூக மேம்பாட்டு திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைளுக்கு பங்களிப்பு வழங்குகின்றது.
அத்தகைய சமூக திட்டத்தின் ஓர் அங்கமாக இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபை நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ் நிறுவனத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் அழகுக்கலை ஆலோசகர்களின் திறன்களை ஊக்குவிக்கும் நோக்கில் வெளிநாட்டு பயிற்சிகளுக்கான புலைமைப் பரிசில்களுக்கு அனுசரணை வழங்க நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.
2013 முதல் 2018 வரையான காலகட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த வெளிநாட்டு பயிற்சி புலைமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் 56 அழகக்கலை ஆலோசகர்களுக்கு தாய்லாந்தின் பிரபல உயர் அழகுக்கலை பயிற்சி பாடசாலையான Chetawan Health Schoolஇல் தங்கும் வசதி உட்பட 7 நாட்களுக்கு பயற்சிகளுக்கான முழுமையான அனுசரணையை வழங்க நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. இதன் முதற்கட்டமாக 2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கடைசிப் பகுதியில் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் 10 அழகுக்கலை ஆலோசகர்களும் ஓர் அதிகாரியும் வெளிநாட்டு பயிற்சிகளுக்கு செல்லவுள்ளனர்.
இந்த அனுசரணைக்;கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் கொழும்பு நாராஹேன்பிட்டியவிலுள்ள இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையில் வைத்து கைச்சாத்திடப்பட்டது. இளைஞர் விவகாரம் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழஹப்பெருமவின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர்/ முகாமைத்துவ பணிப்பாளர் சமந்த குமாரசிங்க, இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவர் கேணல் தர்ஷன ரத்நாயக்க ஆகியோர் கைச்சாத்திட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் மொஹான் லால் கிரேரு, இளைஞர் விவகாரம் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ.திலகரத்ன உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
2005ஆம் ஆண்டு முதல் இதுவரை இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையும் நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ் நிறுவனமும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பு (Private –public Partnership) நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் அழகுக்கலை ஊக்குவிப்பு தொடர்பாக பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்தன. இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை நாடு முழுவதிலும் பயிற்சி பாடநெறிகளை வருடந்தோறும் ஏற்பாடு செய்து இளைஞர் யுவதிகள் மற்றும் ஆலோசகர்களின் திறன்களை மேம்படுத்த இந்த பயிற்சிகள் உதவுகின்றன. இந்த அழகுக்கலை பாடநெறிகளுக்கு தேவையான அழகுசாதன பொருட்களை நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ் நிறுவனமே கடந்த பல ஆண்டுகளாக வழங்குகின்றது.
30 வருட யுத்தத்தின் பின்னர் எழுச்சியடைந்துள்ள இலங்கையில் வேகமாக வளர்ந்து வருகின்ற சுற்றுலாத்துறையில் இளைஞர் யுவதிகள் பங்களிப்பு வழங்கி அவர்கள் சுற்றுலாத்துறை சார்ந்த சுயதொழில்களில் ஈடுபடுவதற்கு இந்த பயிற்சிநெறிகள் முக்கிய பங்காற்றுகின்றது. இத்தகைய காலகட்டத்தில் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையைச் சேர்ந்த அழகுக்கலை ஆலோசகர்களுக்கு வழங்கப்படுகின்ற இத்தகைய வெளிநாட்டு பயிற்சிகள் காலத்தின் தேவை என நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ் நிறுவனத்தின் தலைவர்ஃமுகாமைத்துவ பணிப்பாளர் சமந்த குமாரசிங்க தெரிவித்தார்.
தேசத்தின் அபிவிருத்திக்காக இத்தகைய சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியது அனைத்து உள்ளுர் நிறுவனங்களினதும் பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதே நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ் நிறுவனத்தின் எதிர்பார்ப்பாகும்.நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ் வர்த்தக பெயர் 50 நாடுகளில் அறிவுசார் ஆவணங்கள் தன்னகத்தே கொண்டுள்ளது.
ஐரோப்பாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட GMP மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ISO 9001 மற்றும் ISO 14001 ஆகிய தரச்சான்றிதழின் கீழ் நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் உற்பத்திகளை மேற்கொள்கின்றது. புதிய தொழில்நுட்பத்துடன் அமைந்த கைத்தொழிற்சாலையில் தமது உற்பத்திகளை முன்னெடுக்கின்ற நிறுவனம் தொழிற்சாலையை சூழ 500 இற்கும் அதிகமான விசேடமான இயற்கை மூலிகைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. தமது ஆராய்ச்சிகளுக்காக ஆய்வு நிலையமொன்றை அமைத்த ஒரே ஒரு தனியார் நிறுவனமாகவும் நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன் விளங்குகின்றது. மிகவும் பழமைவாய்ந்த மூலிகைகளை பாதுகாக்கும் நோக்கில் நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.