2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

றிட்ஸ்பரி சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டி

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 16 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை பாடசாலை மெய்வல்லுநர் சங்கம் (SLSAA) ஏற்பாட்டில், றிட்ஸ்பரி அனுசரணையுடன் நடைபெற்ற 83ஆவது சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் அண்மையில் சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பெண்கள் பிரிவில் சம்பியன் பட்டத்தை வலல்ல ஏ ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயமும், ஆண்கள் பிரிவில் சம்பியன் பட்டத்தை நீர்கொழும்;பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியும் வென்றெடுத்தன. CBL ஃபூட்ஸ் இன்டர்நெஷனல் (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் நிலுபுல் டி சில்வா ஆதரவின் கீழ் பரிசளிப்பு விழா இடம்பெற்றது.
 
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 137 புள்ளிகளை பெற்று முதலிடத்தையும், 107 புள்ளிகளுடன் வலல்ல ஏ ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயம் இரண்டாமிடத்தையும் தனதாக்கிக் கொண்டன. மேலும் பெண்கள் பிரிவில், புனித சூசையப்பர் மகளிர் கல்லூரி 135 புள்ளிகளையும், வலல்ல ஏ ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயம் 193 புள்ளிகளையும் பெற்றன.
 
'தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளுக்கு அனுசரணை வழங்குவதன் ஊடாக நாட்டின் இளம் மெய்வல்லுநர்களுக்கான ஆதரவு வழங்குவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது. இந்த பெருமைக்குரிய நிகழ்வுடன் கைகோர்த்துள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகிறோம். இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சங்கம் மற்றும் நாட்டின் ஏனைய விளையாட்டு கழகங்களுடனான எமது வெற்றிகரமான பங்காண்மையை தொடர எண்ணியுள்ளோம்' என ஊடீடு நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் நிலுபுல் டி சில்வா தெரிவித்தார்.
 
போட்டித் தன்மையுடன் நடைபெற்ற மூன்று நாள் நிகழ்ச்சியில், sprinter வீராங்கனையான கேகாலை புனித சூசையப்பர் மகளிர் கல்லூரியின் ருமேஷிகா ரத்னாயக்க மற்றும் சட்டவேலி ஓட்ட வீரரான ரணபிம றோயல் கல்லூரி சுபுன் விராஜ் ரன்தேனிய ஆகியோருக்கு அதிசிறந்த மெய்வல்லுநர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இலங்கையின் விளையாட்டு போட்டிகளுக்கு தொடர்ச்சியாக றிட்ஸ்பரி ஆதரவு வழங்கி வருவதுடன், பல விளையாட்டு போட்டிகளுக்கு அனுசரணையையும் வழங்கி வருகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .