2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் தொடர்பாக கருத்தரங்கு

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 23 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் தொடர்பான கருத்தரங்கு ஒன்றை இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளது. ஆங்கில மொழி மூலத்தில் இடம்பெறவுள்ள இந்த கருத்தரங்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை பி.ப. 1.30 முதல் 5 மணி வரை இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் 4ஆம் மாடியில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
 
இந்த கருத்தரங்கின் போது ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் தொடர்பாக ஊழியர்கள் மற்றும் தொழில் வழங்குநர்கள் வைத்திருக்க வேண்டிய சகல விதமான விபரங்கள் குறித்து விளக்கமளிக்கப்படவுள்ளது. மேலும் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் தொடர்பான பங்குபற்றுநர்களின் சகல விதமான கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படவுள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .