2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பங்குச்சந்தையில் பட்டியலிடுவது தொடர்பான செயலமர்வு வெள்ளியன்று

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 08 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பங்குச்சந்தையில் புதிய நிறுவனங்களை பட்டியலிடுவதற்கு அழைப்புவிடுக்கும் வகையில் வர்த்தக செயலமர்வு ஒன்றை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முன்னெடுக்க கொழும்பு பங்குச்சந்தை தீர்மானித்துள்ளது.
 
வழங்குநர் உறவுகள் தொடர்பாக முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள பல்வேறு செயற்திட்டங்களில் முதன்மையானதாக இந்த செயலமர்வு அமைந்திருக்குமென கொழும்பு பங்குச்சந்தையின் தலைவர் கிரிஷான் பாலேந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த செயலமர்வின் மூலம் வர்த்தக சமூகத்தினரிடையே கொள்கை வியூக மற்றும் நிதிசார் அனுகூலங்கள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், லோஃவ்ஸ் காஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யுகேஎச் வேகாபிட்டிய, பீபிள்ஸ் லீசிங் மற்றும் ஃபினான்ஸ் கம்பனியின் பிரதம நிறைவேற்று அதிகாரி டி பி குமாரகே மற்றும் ஒடெல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஒடாரா குணவர்த்தன ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
 
ஒக்டோபர் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலின் ஓக் அறையில் நடைபெறவுள்ளது. 

கொழும்புபங்குப்பரிவர்த்தனையின் தலைவர் கிரிஷான் பாலேந்திரா நிகழ்விற்கான வரவேற்புரையை நிகழ்த்துவதோடு இலங்கைப் பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி நாலககொடஹேவ சிறப்புரையாற்றுவார்.
 
கலாநிதி நாலககொடஹேவ குறிப்பிடுகையில், 'கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியற்படுத்தல் எண்ணிக்கையினை அதிகரிப்பதானது இலங்கைப் பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் கொழும்பு பங்குப்பரிவர்த்தனை ஆகியவற்றின் கூட்டுக் குழுவின் பத்து பிரதான தந்திரோபாயங்களில் ஒன்றாகும். இந்தநிகழ்வானது பட்டியற்படுத்தப்படாத கம்பனிகளுக்கு, கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியற்படுத்துவதற்குரிய முன்மொழிவுப் பெறுமதியினை அளவிடுவதற்கான ஓர் வாய்ப்பாக அமையும்' எனக் குறிப்பிட்டார்.
 
கிரிஷான் பாலேந்திரா குறிப்பிடுகையில், 'கொழும்பு பங்குப்பரிவர்த்தனையினால், பட்டியற்படுத்துவற்கு எதிர்ப்பார்த்துள்ள நிறுவனங்களுக்கான நிகழ்வுகளில் இது முதலாவது நிகழ்வாகும். இந்த கருத்தரங்கு மூலம் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் உரிமை முதல் அல்லது கடன்களில் பட்டியற்படுத்தல் தந்திரோபாயம் மற்றும் நிதியியல் செயலூக்கப்படுத்தல் விழிப்புணர்ச்சியினை வியாபார சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்த விரும்புகின்றோம்' எனக் குறிப்பிட்டார்.
 
கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் முறைமைப்படுத்தல் விவகார உதவிப் பொதுமுகாமையாளர் ரேனுக விஜேவர்தன கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் உரிமைமுதல் மற்றும் கடன்களில் பட்டியற்படுத்தல் தொடர்பாக உரையாற்றுவார். அத்தோடு லாவ் கேஸ் நிறுவனத்தின் தலைவர் வெகாபிட்டிய, பியுபில்ஸ் லீசிங் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி குமாரகே மற்றும் ஒடெல் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி திருமதி ஒட்டாரா குணவர்தன ஆகியோர் அடங்கிய குழுக் கலந்துரையாடலும் நிகழும். இந்த கலந்துரையாடல் ஷமீந்திரகுலமுனகே அவர்களால் நடுநிலைப்படுத்தப்படும்.
 
இந்நிகழ்வில் அழைப்பிதழ் உள்ளவர்கள் மாத்திரமே பங்குப்பற்ற முடியும். மேலதிக தகவல்களுக்கு 011-2356560 அல்லது ruwangi@cse.lk என்ற மின்னஞ்சலுக்கு தொடர்புகொள்ளவும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .