
இலங்கையின் முன்னணி வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் நிறுவனமான ஹேமாஸ் கன்சியுமர் பிறான்ஸ் நிறுவனத்தின் பொடுகு நிலை கட்டுப்படுத்தும் தயாரிப்பான டான்டெக்ஸ் புதிய மேம்படுத்தப்பட்ட சேர்மானத்துடன் இலங்கை சந்தைகளில் மீள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிமுக நிகழ்வு நுகேகொட பகுதியில் அண்மையில் இடம்பெற்றிருந்தது.
ஆண்களும் பெண்களும் எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான தலையுடன் தொடர்புடைய பிரச்சனையாக பொடுகுச் சிக்கல் அமைந்துள்ளது. ஆனாலும், இந்த நிலையை முறையான சுகாதார பராமரிப்பு மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களின் மூலம் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். மனிதர்களின் தலையில் காணப்படும் ஒரு வகையான பங்கஸ் நுண்ணங்கியின் மூலமாக பொடுகு நிலை ஏற்படுகிறது. ஏனவே சாதாரணமான கூந்தல் பராமரிப்பு தயாரிப்பொன்றை பயன்படுத்தி கூந்தலை கழுவுவதன் மூலம் கண்களுக்கு புலப்படும் பொடுகு நிலையிலிருந்து விடுதலை பெற முடியாது.
பொடுகு நிலையை ஏற்படுத்தும் காரணியை ஹேமாஸ் நிறுவனத்தின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டதன் மூலம் கண்டறிந்திருந்தது. இந்த ஆய்வுகளின் பெறுபேறுகளை கொண்டு டான்டெக்ஸ் தயாரிப்பை மேலும் மெருகேற்றியுள்ளது. இந்த புதிய மேம்படுத்தப்பட்ட டான்டெக்ஸ் தயாரிப்புகளில் பொடுகு நிலைகளுக்கு எதிராக கடுமையாக போராடக் கூடிய க்ளிம்பசோல் எனும் சேர்மானம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த க்ளிம்பசோல் சேர்மானம் பொடுகு நிலையை ஏற்படுத்தும் மலஸ்சீசியா எனும் ஃபங்கஸ் நுண்ணங்கிக்கு எதிராக நேரடியாக போராடக் கூடிய ஆற்றலை கொண்டுள்ளது. ஆய்வு பெறுபேறுகளுக்கு அமைவாக, 30 வகையான மலஸ்சீசியா ஃபங்கஸ் நுண்ணங்கி நிலைகளுக்கு எதிராக போராடி, பொடுகு நிலையை கட்டுப்படுத்தக்கூடியது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய மேம்படுத்தப்பட்ட டான்டெக்ஸ் ப்ளஸ் ஷாம்பு மீள் அறிமுகம் செய்யும் நிகழ்வு அண்மையில் நுகேகொட பகுதியில் இடம்பெற்றிருந்த போது, பல்வேறு பொடுகு நிலைகள் குறித்து விளக்கமளிக்கும் வகையிலான விழிப்புணர்வு செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தன. இந்த அறிமுக நிகழ்வுக்கு முன்னோடியாக, மக்கள் மத்தியில் பொடுகு நிலைகள் பற்றியும், அதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'தலைக்கு விடுதலை' எனும் தலைப்பில் பிரதான நகரங்களில் நடமாடும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
'தலைக்கு விடுதலை' என்பது பொடுகு நிலையினால் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனைகள் குறித்து விளக்குவதாக அமைந்திருந்தது. பொடுகு பிரச்சனை என்பது வாழ்க்கை முறை குறித்த ஒரு பிரச்சனை என்பதால் ஒரு தனிநபரின் மனநிலையை பாதிக்கும் விடயமாக இது அமைந்துள்ளது. பொடுகு துகள்கள் தொடர்ச்சியாக வெளிப்படுவதன் காரணமாக, குறித்த பொடுகு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நபர் சமூக தொடர்பாடல்களை மேற்கொள்ளும் போது தமது சுய நம்பிக்கையை இழந்தவராக காணப்படுவார்.
டான்டெக்ஸ் வர்த்தக நாமத்தின் உதவி வர்த்தக நாம முகாமையாளர் தினாலி சுகததாச கருத்து தெரிவிக்கையில், 'பொடுகு நிலையை கட்டுப்படுத்தும் வர்த்தக நாமமாக உள்நாட்டு சந்தையில் டான்டெக்ஸ் தனது நாமத்தை உறுதி செய்துள்ளது. புதிய மேம்படுத்தப்பட்ட டான்டெக்ஸ் தயாரிப்பில் அடங்கியுள்ள கண்டிஷனர் மூலம் கூந்தலை மிருதுவாகவும் பாதுகாப்பாக பேண முடிகிறது' என்றார்.
உள்நாட்டு சந்தையில் பொடுகு கட்டுப்படுத்தும் ஷாம்பு வகையாக 1992 ஆம் ஆண்டு டான்டெக்ஸ் ப்ளஸ் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதில் இரண்டு வகையான ரகங்கள் காணப்படுகின்றன. பொடுகு நிலையை கட்டுப்படுத்தும் வகையில் க்ளிம்பசோல் சேர்மானம் அடங்கிய டான்டெக்ஸ் ப்ளஸ் மற்றும் ஆரோக்கியமான, மென்மையானதும் பளபளப்பானதுமான கூந்தலைப் பெற்றுக்கொள்ள உதவும் முட்டைப்புரதம் அடங்கிய டான்டெக்ஸ் ஃபெமிலி ஆகியன இவையாகும்.