2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இலங்கையில் ஸ்மார்ட் ஃபோன்கள் விற்பனை அதிகரித்துள்ளது: சிங்கர்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 30 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் ஸ்மார்ட் ஃபோன்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக சிங்கர் ஸ்ரீலங்கா அறிவித்துள்ளது. தனது புதிய SLIM ரக கையடக்க தொலைபேசிகளை இலங்கை அறிமுகம் செய்யும் நிகழ்விலேயே நிறுவனம் இவ்வாறு தெரிவித்திருந்தது.
 
சீனாவின் ஹுவாவே தயாரிப்புகளின் இலங்கையின் ஏக விநியோகத்தர்களாக திகழும் சிங்கர் ஸ்ரீலங்கா அண்மையில் இலங்கையில் Ascend P6 ஸ்மார்ட் ஃபோன் வகைகளை அறிமுகம் செய்திருந்தது.
 
இந்த நிகழ்வில் சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் மஹேஷ் விஜேவர்தன கருத்து தெரிவிக்கையில், ”உலகளாவிய ரீதியில் வாடிக்கையாளர்கள் தொழில்நுட்ப ரீதியில் முன்னேற்றமடைந்து செல்கின்றனர். இலங்கையிலும் இந்த நிலை விதிவிலக்கல்ல. கையடக்க தொலைபேசிகளை பொறுத்தமட்டில் நகரம் கிராமம் எனும் வேறுபாடுகள் எதுவுமில்லை” என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .