2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஈரானிய எண்ணெய் இறக்குமதியை இலங்கை நிராகரித்தது

A.P.Mathan   / 2013 நவம்பர் 11 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானிலிருந்து கடந்த மாத இறுதியில் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த மசகு எண்ணெய் தொகையை இலங்கை நிராகரித்திருந்ததாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தது.
 
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை மீறி இந்த ஏற்றுமதி நடவடிக்கை அமைந்திருந்ததாகவும், இதன் காரணமாக அமெரிக்காவுடன் பகைமை ஏற்றுபடுத்திக் கொள்ள நேரிடுவதுடன், பொருளாதார தடைகளுக்கும் முகங்கொடுக்க நேரிடும் எனும் காரணத்தால் இந்த தீர்மானத்தை தாம் மேற்கொண்டதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தது.
 
கடந்த டிசெம்பர் மாதம் வரை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஈரானிடமிருந்து இலங்கை மசகு எண்ணெயை இறக்குமதி செய்து வந்தது. ஆயினும், ஈரான் மீது அமெரிக்கா கடும் பொருளாதார தடைகளை மேற்கொண்டதன் பின்னர், இலங்கை மாற்றீட்டு நாடுகளாக சவுதி அரேபியா, ஓமான் மற்றும் வடிகட்டிய எண்ணெய் வகைகளுக்கு ஏனைய நாடுகளையும் நாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .