.jpg)
வியாழக்கிழமை நவம்பர் 15, அன்று கொழும்பிலிருந்து மிஹின் லங்கா சீஷெல்சுக்கான தனது விமான சேவையை ஆரம்பித்துள்ளது. இந்த தீவிற்கு வாரத்தில் இரண்டு நாட்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில், பயணிக்கும் மிஹின் லங்கா, விடுமுறையைக் களிக்கச் செல்பவர்களுக்கு அழகின் செழுமை கொட்டிக்கிடக்கும் சீஷெல்ஸ் தீவின் அற்புதங்களை சுற்றிப்பார்ப்பதற்கான வாய்ப்பளிக்கின்றது. சீஷெல்ஸ் விமான சேவை, கொழும்பிலிருந்து 1330 ற்கு புறப்பட்டு, சீஷெல்சை 1610ற்கு சென்றடையும். சீஷெல்சிலிருந்து 1710ற்கு புறப்பட்டு, கொழும்பை 2300ற்கு வந்தடையும்.
இந்த விமானப் பயண சேவை குறித்து கருத்துத் தெரிவித்த மிஹின் லங்கா பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன அவர்கள் 'எமது புதிய பயண இலக்கான சீஷெல்ஸ்'ற்கு இன்று முதல் ஆரம்பிக்கப்படும் விமான சேவை குறித்து நாம் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்ப்பார்த்திருக்கிறோம். தனித்துவமிக்க இந்த விமானப் பயண அனுபவமானது, எம்முடன் பயணிப்போருக்கு, ஆபிரிக்காவின் கலாசாரம் குறித்த உள்ளார்ந்த அனுபவத்தை அளிக்கும் என்றால் அது மிகையில்லை' என்றார்
மிஹின் லங்கா தற்போது பஹ்ரெய்ன், டுபாய், கயா, வாரணாசி, மதுரை, டாக்கா, ஜகார்த்தா மெடான் என பிராந்தியத்தின் 9 இடங்களுக்கு சேவையளிப்பதுடன், நவீன விமானக்கூட்டத்தின் துணையுடன், தொடர்ந்து, இன்னும் பல இடங்களுக்கு பயணம் செய்யத் தயார் நிலையில் உள்ளது. மிஹின் எயார் சேவையில் பயணிப்பவர்கள் மேம்படுத்தப்பட்ட விருப்ப உணவுகள், சிறுவர்களுக்கான உணவுகள், ட்யூட்டி ஃப்ரீ பொருட்களை வாங்குதல், விமான பொழுதுபோக்கு உள்ளிட்ட பற்பல சலுகைகளை பெற்றுக்கொள்கின்றனர்.
