2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கடன் அட்டை சந்தை மீண்டும் உயர்வு: மத்திய வங்கி

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 31 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மைக்காலமாக கடன் அட்டைகளை பெற்றுக் கொள்வோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 
 
கடந்த மார்ச் மாதம் கடன் அட்டைகளை பெற்றுக் கொள்வோரின் எண்ணிக்கை சடுதியாக வீழ்ச்சியடைந்திருந்ததுடன், கடன் அட்டைகளை வைத்திருந்த சுமார் 25000 வாடிக்கையாளர்கள் ஒரே மாதத்தில் தமது அட்டைகளை இரத்துச் செய்திருந்தனர். 
 
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 926,649 ஆக காணப்பட்ட நாட்டின் மொத்த கடனட்டைகளின் எண்ணிக்கை மே மாதமளவில் மீண்டும் அதிகரித்து 937,130 ஆக அதிகரித்திருந்ததாக மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
 
இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்பட்ட போதிலும், 2012ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த எண்ணிக்கை குறைவாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .